பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நடுவுநிலைமை போற்றும் இயல்பு வளர்ந்தாலே சமூகம் வளரும்! வாழும்! சான்றோர் வீதிதோறும் காணப்படுதல் வேண்டும். வளைகுடாப் போர் அமைதியாக இனிதே முடியவேண்டும். ஈராக் அதிபர் சதாம் உசேன் போரினை நிறுத்த முன்வர வேண்டும். இது நமது விருப்பம்! உலக மக்கட் சமுதாயத்தின் விருப்பம். இனிய செல்வ, பொறுத்திருந்து பார்ப்போம்! மீண்டும் எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்
53. அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா?

இனிய செல்வ,

வளைகுடாப்போர், தற்காலிக ஓய்வு பெற்றிருக்கிறது. போர் நிலையாக நிற்க உலக நாடுகள் அவை துணை செய்ய வேண்டும். துணை செய்யும் என்று நம்புவோமாக.

இனிய செல்வ, வளைகுடாப்போர் இரண்டு அநியாயங்களுக்கிடையில் நடந்த போர். அமெரிக்காவின் அநியாயம் 35 விழுக்காடு ஈராக்கின் அநியாயம் 25 விழுக்காடு உலக நாடுகள் சபையின் அநியாயம் 40 விழுக்காடு இப்படித்தான் அநியாயத்தைப் பங்கு போட வேண்டியிருக்கிறது. ஆம்; குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தது குற்றம் குற்றமே! ஆக்கிரமிப்புக்குப்பின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பைக் காரணங்காட்டியது. காரணத்தில் உண்மை இருக்கிறது. சொன்ன ஈராக் அதிபரிடத்தில் தான் உணமை இல்லை. இனிய செல்வ, அமெரிக்காவுக்கு இந்த உலகில் குவைத் ஆக்கிரமிப்பு மட்டுந்தானே தெரிந்தது. பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நடந்து எத்தனை ஆண்டுகளாயிற்று. அமெரிக்காவின் கண்ணை உறுத்துவது ஈராக்கின் ஆக்கிரமிப்பு அல்ல. குவைத்தின் எண்ணெய் வளம்! ஆம்; குவைத்தின் எண்ணெய் வளம் இனி அமெரிக்காவின் ஆஸ்தி போல! உலகநாடுகள் பேரவை! இல்லை, இல்லை? வல்லாளர்கள் கை ஓங்கும் பேரவை! அமெரிக்காவின்