பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



391


எடுபிடிகளாகச் சில நாடுகள் உலக நாடுகள் பேரவையில் இடம் பெற்றுள்ளன! இவை கை தூக்கிகள்! இனிய செல்வ, கொரியாவில் -வியத்நாமில் சண்டை நடந்தபோது உலக நாடுகள் பேரவை தனது படையை அனுப்பியது. அதுபோல உலக நாடுகள் பேரவை இன்று செய்யாதது ஏன்? இந்த அநியாயம்தான் உலக நாடுகள் பேரவை செய்தது! நமது நாட்டில் ஆட்சிகள் இல்லாத தனி நபரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு "சர்வ கட்சி” என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோலத் தான் பன்னாட்டுப் படை!

இனிய செல்வ, உலக நாடுகளின் பந்தோபஸ்து சபை குவைத்தை மீட்கத்தான் பன்னாட்டுப் படைக்கு அனுமதி தந்தது. ஆனால் தாக்கி அழிக்கப்பட்டவரோ ஈராக் மக்கள்! ஏன் இந்தக் கொடுமை? தட்டிக் கேட்க உலக அரங்கிலேயே யாரும் ஆள் இல்லையா? அந்தோ பரிதாபம்! இனிய செல்வ, வளைகுடாப்போர் ஓய்ந்து விட்டது. ஆனால் போரின் விளைவுகள் என்ன? ஈராக்கையும் குவைத்தையும் திரும்ப எடுத்துக் கட்ட பல்லாயிரம் கோடி தேவை. எண்ணற்ற குடும்பங்கள் நிராதரவாக உள்ளன. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.

இனிய செல்வ, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விளைவு தோன்றினால் என்ன செய்வது? இனிய செல்வ, விளங்க வில்லையா? ரெளடிகள் முதலில் இளைத்தவனைத் தான் தாக்குவார்கள். பின் வாழ்க்கையாகிவிடும். எல்லாரையும் தாக்குவார்கள். ஈராக்கைத் தாக்கி வெற்றி கண்ட அமெரிக்கா, நாளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளாகிய வளர்முக நாடுகளிடத்தில் எப்படி நடந்து கொள்ளும்? ஏன் நமது இந்தியாவிடமே எப்படி நடந்து கொள்ளும்? 'சண்டித்' தனத்தைக் காட்டாது என்று நம்புவதற்கு என்ன உத்தரவாதம்? இனிய செல்வ, இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாடுகள் தனித்தனியே படைவைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்! ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடாது! உலக நாடுகளின் பேரவை மட்டுமே படைவைத்துக் கொள்ள