பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



403



திருக்குறள் உலகப்பொதுமறை! ஆம்! உண்மை! இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துக் கூறினோமா? உலக மாந்தர் திருக்குறளை ஏற்றுக்கொள்ளச் செய்தோமா? இனிய செல்வ, உனக்குக் கோபம் வருகிறதா? ஏன் வராது? ஆம்! நீ கூறுவது உண்மை? இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் திருக்குறள் வந்திருப்பது உண்மை! அதுவுங்கூடத் தமிழன் தந்ததல்ல அறிவுபசியெடுத்த அயல்வழி அறிஞர்கள் வந்து எடுத்துக்கொண்டு போனார்கள்!

இனிய செல்வ, திருக்குறளைப் படிப்பது வேறு; அறிவது வேறு; திருக்குறள் நெறிகளை ஏற்று வாழ்தல் என்பது வேறு. தமிழ் மக்கள் திருக்குறளை வாழ்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. திருக்குறளை நாம் வாழ்வாக்கிக் கொள்ளாமல் வழிபாட்டு நிலைக்குத் தள்ளினோம்! இதனால், திருக்குறளை நாட்டு நூலாக ஆக்கவேண்டும் என்ற கொள்கை வலுபெறுவதாக நீ கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆயினும், திருக்குறளை நாட்டு நூலாக்க நாட்டு மக்களிடத்தில்-பல்வேறு மொழிகளில் திருக்குறளின் பொதுமையை, திருக்குறள் காட்டும் மனிதத்தை எடுத்துக் கூறினால் தான் நாட்டுமக்கள் ஏற்பார்கள்? மக்களின் ஏற்பு வழி திருக்குறள் நாட்டு நூலாகும். இந்தப் பணியைத் தமிழ் மக்கள் செய்யவில்லை; தமிழறிஞர்கள் செய்யவில்லை; தமிழ்நாடு அரசு செய்யவில்லை. இனிய செல்வ, இதனை உணர்ந்து உலக மாந்தருக்குத் திருக்குறளின் பொதுமையை விளக்குவதற்காகத் திருக்குறள் உலக ஆய்வு மையம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் தொடங்கிப் பணி செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. மதுரை அறநெறி அண்ணல் எஸ். நாராயணன் செட்டியார் அவர்களும், நமது திருக்குறள் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் ந.மணிமொழியன் அவர்களும் இந்த மையத்தை இயக்க முன் வந்தார்கள்! ஆயினும், நல்லூழின்மையால் இயங்கவில்லை. இனிய செல்வ, பொறுப்பேற்றுக் கொண்டவர்கள். செயல்