பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



409


(பொதுத்துறை என்பது அரசு மக்கள் துறை) மூன்றாவது மக்களின் கூட்டுடைமைச் சொத்து, அடுத்து அரசுடைமை (மக்களுடைமை)ச் சொத்து.

இனிய செல்வ, நமது நாட்டில் முதல் மூன்று சொத்து வகைகளும் நடைமுறையில் உள்ளன., அதாவது, ஏகபோகத் தனியுடைமையும் உண்டு. பொதுத்துறையும் உண்டு; கூட்டுடைமையும் உண்டு; நமது நாட்டின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரம் என்பர் அரசியல் வாதிகள், ஆயினும் நமது நாட்டில் தனியுடைமை வளர்ந்திருப்பதைப் போல், பொதுத்துறை வளரவில்லை. கூட்டுடைமையும் வளரவில்லை. ஏன் பொதுத்துறை வளரவில்லை? இனிய செல்வ, நம்மில் பலர் நாட்டுப் பற்றுடன் பொதுத்துறையை வளர்க்கவும் கூட்டுறவை வளர்க்கவும் உரிய மனப்பான்மையுடன் வளரவில்லை; வளர்க்கப் பெறவும் இல்லை! பழைய பழமொழி ஒன்றுண்டு! "மகள் பொன்னிலும் மாகாணிப் பொன் எடுப்பான்” என்று கூறுவர். இனிய செல்வ, "நாமிருக்கும் நாடு நமது” என்றும், "மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்றும் "எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்றும் பாரதி பட்டயங்கள் தந்த பிறகும் பாரதி பட்டயத்தைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டம் "நாம் அனைவரும் இந்திய நாட்டில் சம உரிமை பெற்றவர்கள்” என்று உரிமைச் சாசனம் செய்த பிறகும் நமக்கு நாட்டுடைமையைக் காப்பாற்றும் அக்கறையை விட நம்முடைய சொத்தைக் காப்பாற்றுவதில் தானே அக்கறை. ஆர்வம், திறமை யெல்லாம் செயற்பாடுறுகிறது! ஏன்? நாட்டையே வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அளவுக்கு நம்மனோரின் மனநிலை கெட்டுப் போயிருக்கிறது. இதனால், தனியுடைமை நிறுவனங்கள் வளர்ந்து வருவதுபோல் பொதுத்துறை வளரவில்லை; கூட்டுடைமையும் வளர வில்லை; வளரவிடவும் இல்லை ‘மனிதன்’, ‘இந்தியன்’ என்ற உணர்வுகளை விட "நான்” ‘எனது’ என்ற உணர்வும்