பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



411


உரிமையும் உண்டு. ஆனால் ‘தனி உடைமை’ இல்லை. திருவள்ளுவர் ‘வீட்டையும் தாம் நுகரும் பொருளையுமே’ தன்னுடையது என்று தனியுடைமைப் பட்டியலில் வைக்கிறார்.

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்று” 1107 என்ற திருக்குறளை அறிக. அதாவது ஒருவன் குடியிருக்கும் வீடும் அவன் நுகரும் பொருள்களும் அவரவருடைய உழைப்பில் ஈட்டியவை. தனியுடைமைச் சொத்துக்கள். இவை (Private Properties) இவை உற்பத்தியுடன் தொடர்புடைய சொத்துக்கள் இல்லையென்பது அறிக. உற்பத்திக் களங்களில் தலையாயது நிலம். நில உடைமை பற்றித் திருக்குறள் என்ன கூறுகிறது? நிலத்தை உழுது பயன் காண்பவன் அந்த அளவுக்கு நில உரிமை கொள்ளலாம் என்பது திருவள்ளுவர் கருத்து. இனிய செல்வ,

"செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

(1039)

என்ற திருக்குறளில் நாள்தோறும் கழனிக்குச் செல்ல வேண்டும் என்பதாலும் கணவன்-மனைவி உறவை நில உறவுக்கு உவமையாக்கிக் கூறியதாலும் நிலம் உழவனின் உரிமைப்பொருள் என்று கூறி, உழாதாரின் நில உரிமை-ஜமீந்தாரி உரிமை போன்றவற்றை திருவள்ளுவர் கேள்விக் குறியாக்கியுள்ளார் என்பதை எண்ணுக.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

(1033)

என்ற திருக்குறளையும் ஓர்க. இனிய செல்வ, சுரண்டல் பொருளாதார அமைப்பை, திருவள்ளுவர் ஏற்கவில்லை என்பதனை,

சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று”

(66)