பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிக்கல்கள் அதிகம் எழா! ஒரோவழி எழுந்தாலும் வெப்பம் குறைந்திருக்கும். ஒரு நாடு என்றால் என்ன? இந்த நாட்டின் இயற்கை வளங்கள் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுடையன அல்லவா? இந்திய அரசு, மாநிலங்களை இணைக்கும் சாலைகளை, தேசீய நெடுஞ்சாலையாக்கி உரிமைப்படுத்திக் கொண்டுள்ளது. இரயில்வேயை இணைத்து இந்திய இரயில்வேயாக ஆக்கியுள்ளது. ஆனால் இனிய செல்வ, இந்திய நதிகளை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளாதது ஏன்? இது புரிந்து கொள்ள முடியாத புதிர்! இனிய செல்வ, இந்த நிலையில் நம் தமிழ் நாட்டின் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தென்னிந்தியாவின் நதிகளையாவது முதலில் இணையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். உடனே ஆந்திர முதலமைச்சர் மறுத்து விட்டார். இனிய செல்வ, இந்திய நாட்டின் நீர் வளத்தில் ஒரு பகுதி கடலில் போய்க் கலந்து வீணாவதை யாராலும் மறுக்க இயலுமா? ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் காலங் கடத்துவதனால் தோன்றும் எதிர் விளைவுகள் பற்றி நமது அரசியல் தலைவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்? இனிய செல்வ, எதையும் உரிய காலத்தில் செய்யவேண்டும் என்பது திருக்குறளின் கோட்பாடு.

"அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்"

என்பது குறள்.

கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதி நீர்ச் சிக்கல் அப்படியொன்றும் கடுமையான தல்ல. ஆனால், நடுவண் அரசு கால தாமதம் செய்வதன் மூலம் பிரச்சனையைக் கடுமையானதாக்குகிறது என்பதே உண்மை; உடலுக்கு நோய்வரின் உடன் விரைந்து மருந்து தேடுவதைப்போல மனித உறவுக்குத் தீங்கு ஏற்படக்கூடிய செய்திகளுக்கு விரைந்து தீர்வு காணவேண்டும். அப்படியல்லாது காலந்தாழ்ப்பின் அநியாயங்கள் பழக்கப்பட்ட