பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



421



இனிய செல்வ, இன்று எங்கும் தியாகத்தையும் காணோம். சேவையையும் காணோம்! எங்கும் கையூட்டு; ஏன், இந்த நிலை? இலட்சியம் உடைய மனிதரையே நம்முடைய உலகம் உருவாக்கவில்லையே! இலட்சியம் குறிக்கோள் இவற்றில் ஒற்றுமை இருந்தால் அபிப்பிராய பேதங்கள் உருவாகா. உருவானாலும் பிரிவினைகளைத் தாரா; இனிய செல்வ, அண்ணல் காந்தியடிகளுக்கும் அமரர் நேருஜிக்கும் இடையில் எவ்வளவு அபிப்பிராய வேற்றுமைகள்! ஆயினும் ஒன்றுபட்டு இருந்தனர். ஏன்? நாடு விடுதலை பெற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது? இன்று அப்படி உயர் குறிக்கோள் உடைய மனிதரையும் காணோம்! இயக்கங்களையும் காணோம்! அதனால்தான் கட்சிகள் கூடப் பச்சை மண்பானைப் போல நொறுங்குகின்றன. அல்லது எரிமலைக் குழம்பினைப் போல குழம்புகின்றன, சுரண்டலும் ஆதிக்கமும் அன்பின்-நட்பின் ஆக்கத்திற்கு எதிர்பண்புகள்! இன்று எங்கு நோக்கினும் இவைகளே ஆரவாரத்துடன் ஆட்டம் போடுகின்றனர். ஐயோ பாவம்-அன்பு, தொண்டு, தியாகம் இவை பொருளிழந்த சொற்களாயின.

இன்ப அன்பு
அடிகளார்
64. கீழ்மக்கள்

இனிய செல்வ,

"தேவலோகம்” என்ற ஒன்றைப்பற்றிப் புராணங்கள் பலபடக் கூறுகின்றன. அப்படி ஒரு தேவலோகம் இருக்கிறதோ, இல்லையோ தேவலோகத்தைப் பற்றிப் புராணங்கள் கூறும் செய்திகள் தேவலோகத்திற்குப் போகும் ஆர்வத்தைத் துரண்டுகின்றன. ஆம்! தேவலோகத்தில் காமதேனு உண்டு; கற்பகத்தரு உண்டு. வேண்டியன வேண்டியாங்கு பெறலாம். யாதொரு துன்பமும் இல்லை! ஆனால், தேவலோகத்தில் சண்டை ஓய்ந்ததே இல்லை. தேவர்களைப்