பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



423



ஆதலால், கயவர்கள் சமுதாய நலங் கொல்வர்; அவர்கள் புல்லுருவிகள்! அதுபோலத் தேவர்களும் விரும்பியதையே பேசுவார்; செய்வர். அதனால் தேவ-அசுர யுத்தங்கள் நடைபெற்றன. தேவர்களின் கயமைத் தனத்தை எதிர்த்தே அசுரர்கள் போரிட்டனர்.

"தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்” - குறள்

இன்ப அன்பு
அடிகளார்
65. மக்களாட்சி முறை

இனிய செல்வ,

உலக வரலாற்றில் மக்களாட்சி முறை ஜனநாயக ஆட்சி முறையின் தோற்றம். வரலாற்றின் திருப்பு மையமாகும். கோட்டை, கொத்தளங்களில் வாழ்ந்த அரசர்கள்-பிரபுக்களிடமிருந்த கட்டுப்பாடில்லாத அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் முடியரசுகள் மக்கள் அரசுகளாக மாற்றப்பட்டன. இனிய செல்வ, மக்கள் வரலாற்றில் இது ஒரு திருப்பு மையம். ஆயினும் என்? ஆபிரகாம் லிங்கன், "மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது குடியாட்சி" என்று மக்களாட்சி பற்றிக் கூறினான். மக்களாட்சி முறையில் அரசியல் தலைமை ஏற்பது முடியாட்சியில் உள்ளதைவிடப் பொறுப்புமிக்குடையது. மிகமிக வளர்ந்த மனப்பாங்கு தேவை. மக்களுக்காக ஆட்சி என்பதை மறந்து விடக்கூடாது. சாதி, மதம், கட்சி, நண்பர், பகைவர் என்றெல்லாம் பாராது மகவெனப் பலர் மாட்டும் உறவும் உரிமையும் கொண்டு ஒழுகும் விரிந்த மனப்பான்மை ஜனநாயக ஆட்சியின் அரசியலாளருக்கும் ஆள்பவருக்கும் தேவை. எல்லாருக்கும் நீதி கிடைப்பதில் இடர்ப்பாடுகள் இருந்தாலும் தமக்கு அநீதிகள் இழைக்கப்பட வில்லை என்ற உணர்வையாவது குறைந்த அளவு மக்களாட்சி முறை அரசியலார் மக்களுக்கு வழங்கியாக வேண்டும். அப்படி