பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



425


66. வன்முறை தவிர்ப்போம்!

இனிய செல்வ,

அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நாடெங்கும் அமைதியாக நடத்தப்பெற்றது. அது மட்டுமல்ல, அமரர் ராஜீவின் உயிரைக் குடித்த வன்முறையை எதிர்த்தும் வன்முறை எதிர்ப்புணர்வு காட்டப்பெற்றது. வன்முறையை எதிர்த்து நாடெங்கும் உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பெற்றது. இனிய செல்வ, எது வன்முறை? வெட்டுதலும் சுடுதலும், கொலை செய்தலும் மட்டுமல்ல வன்முறை. சிந்தனையிலும் சொல்லிலும், ஒருவரைப் புண்படுத்துவது கூட வன்முறையே என்று அண்ணல் காந்தியடிகள் கூறினார்.

இனிய செல்வ, வன்முறையும் ஜனநாயகமும் நம்முள் முரணானவை! நல்ல பண்பட்ட ஜனநாயக ஆட்சிமுறையை - மக்களாட்சி முறையைப் பின்பற்றுபவர்கள், ஒழுக்கமாகக் கொண்டவர்கள் ஒருபொழுதும் வன்முறையாளர்களாக இருக்க மாட்டார்கள்! ‘வன்முறை’யை அங்கீகரிக்கமாட்டார்கள்!

இனிய செல்வ,

"செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பு"டை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"

"இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று”

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்றுள்ளக் கெடும்!”

என்ற திருக்குறளைச் சிந்தனை செய்க! இனிய செல்வ, இந்த திருக்குறள்கள் வன்முறைக்கு எதிரானவை!

மக்களாட்சி வாழ்க்கை முறையில் கருத்துப் பரிமாற்றம் தான் முதன்மையான செயற்பாடு! கருத்துப் பரிமாற்றம்