பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


68 . என்புருக்கி நோய்

இனிய செல்வ,

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் வகுத்துக் கூறியுள்ளார்! நம்முடைய நாடு எப்படி இருக்கிறது? திருக்குறள் விளக்கும் நாடாக உள்ளதா? திருக்குறள்;

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

என்று நாடு எப்படி இருக்கக்கூடாது என்று விளக்குகிறது!

நாட்டில் பல குழுக்கள் இருக்கக்கூடாது. நமது நாட்டின் நிலை என்ன? நமது நாட்டில் பல குழுக்கள் உள்ளன. சாதிகள், சாதிக்குள் சாதிகள், பலப்பல மதங்கள், எண்ணற்ற அரசியல் கட்சிகள், மாதர் பேரவைகள், நடிகர் மன்றங்கள்! இவைபோக காரணங் கூற இயலாத அழுக்காற்றின் வழியில் அமைந்த பல குழுக்கள்! குழுக்களுக்குள் மோதல்கள், அழுக்காறு! அவா! வெகுளி! இங்ஙனம் குழுக்கள் பலவானதற்குக் காரணமென்ன? இனிய செல்வ! சரியான கேள்வி? முதற்காரணம் நல்ல உயர்ந்த குறிக்கோள் இன்மையே! இனிய செல்வ! குழு மனப்பான்மை என்பது தற்சார்பான ஒரு சிறிய வட்டம். அவ்வளவுதான்! சுயநலக்காரர்கள், தற்பெருமை பாராட்டுபவர்கள், அகங்காரம் உடையவர்கள் நீண்ட காலத்திற்குப் பலர் ஒன்று கூடி வாழ்தலும் அரிது! ஏன்? அவரவர்களுடைய நலன் பாதிக்கப்படும்பொழுது பொதுமை கருதி விட்டுக் கொடுக்க மாட்டார்கள்! பிரிந்து போய்த் தான் அடைய விரும்பியதை அடைய முயற்சி செய்வர்.

மாறுபட்ட நோக்கங்களும், முரண்பட்ட நலன்களும் உடையவர்கள் நீண்ட நாட்களுக்கு ஒன்றுபட்டு ஒத்து வாழ