பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உருவாவதேயாம்! இனிய செல்வ! நம்மை நாள்தோறும் இட்டுச் செல்வது அல்லது வழிநடத்திச் செல்வது நமது பழக்கங்களும் வழக்கங்களுமேயாம். பழக்கம் தவிரப் பழகும் அறிவும் ஆளுமையும் நமக்கு இருப்பின் ஊழ்உருவாகாமலே தடுக்கலாம். ஒரோ வழி எளிதில் வெற்றியும் பெறலாம். இதுவே நமது கருத்து.

மார்ச்சு 13,14-ல் திருக்குறள் பேரவை மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ‘வள்ளுவர் வழி’ ஆசிரியர் இனிய அன்பர் கல்லை தே.கண்ணன் அவர்களுக்குப் பாராட்டுச் செய்யவும் பொன்னாடை போர்த்தவும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. வழக்கம்போல நம்மவர்கள் விழாவைக் காலந்தாழ்த்தினர். ஆதலால் தே.கண்ணன் அவர்களுடைய பாராட்டு விழாவிற்கு அடுத்த படியாக இருந்த ஒரு பாராட்டு விழாவும் ஒரே விழாவாக நடத்தவேண்டிய அறச்சங்கடம் தோன்றிவிட்டது. அந்த விழாவில் திருக்குறளை, செளராஷ்டிர மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட பூஜ்யஶ்ரீ சித்தநரஹரி அவர்களுக்கும் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தை நடத்திச் சாதனை செய்த அறநெறியண்ணல் கி.பழநியப்பனார் அவர்களுக்கும் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரே மேடையில் நால்வருக்கும் பாராட்டுவிழா; விழாக் குழுவினர் பொறுப்பில் ஏற்பாடு! நமது ஏற்பாடும் கலந்து பேசி முடிவெடுக்கவில்லை. ஏன்? விழா நேரம் வெவ்வேறுதானே! விழாக் குழுவினர் எல்லா விழாக்காரர்களையும் போலப் 'பொன்னாடை’ வாங்கி வைத்திருந்தனர். நமது ஏற்பாடு பொன்னாடைகளே! இனிய செல்வ, விழா மேடையில் வேறுபாட்டைத் தவிர்க்க இயலவில்லை, ஏன்? விழா நாள் ஞாயிற்றுக் கிழமை! புதியதாகப் பொன்னாடைகள் வாங்க இயலவில்லை. நமக்கும் அவர்கள் ‘பொன்னாடை’ தான் வாங்கியிருக்கிறார்கள் என்று முன்கூட்டியும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் பணி நெருக்கடி! என்ன செய்வது? விருந்தினருக்குப் பொன்னாடை