பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புரட்சியின்போது ‘தவாரிஷ்’ என்ற சொல் மந்திரச் சொல் போல் விளங்கியது. ‘தவாரிஷ்’ என்றால் ‘தோழன்’ என்பது பொருள். அதுமுதல், பொதுவுடைமை இயக்கத்தில் தோழன் என்ற சொல் பெருவழக்காயிற்று. ஆதலால் தோழன் என்ற சொல்லை பொதுவுடைமைக் கட்சி சாராதவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இது தவறு. "தோழன்” என்ற சொல் வழக்கு நல்ல வழக்கு. தோழர்களைத் தேடுவோம்! கோப்பெருஞ் சோழனுக்கு ஒரு பிசிராந்தையாரும், வள்ளல் பாரிக்கு ஒரு கபிலரும், நற்றமிழ் நம்பியாரூரருக்கு ஒரு சில பெருமானும் போலத் தோழர்கள் வாய்த்தால் வாழ்வு சிறக்கும்! புரூட்டஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது!

இன்ப அன்பு
அடிகளார்
75. தீமையை எதிர்த்து நில்

இனிய செல்வ,

மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை; இருப்பதும் இயலாது. ஆயினும் நல்லவர்களாக இல்லாது போனாலும் கெட்டவர்களாகாமல் இருக்கக்கூடாதா? மற்றவர் மனம் புண்படப்பேசுவதும் நடந்து கொள்வதும் நல்லதா? அவசியமா? இனிய செல்வ! கருத்து வேற்றுமை கலகங்களை வளர்க்க வேண்டுமா? சொத்துத் தகராறுகளைப் பேசித் தீர்க்க இயலாதா? மனிதன் மனம் வைத்தால் எது நடக்காது?

இனிய செல்வ, இன்று எல்லோரிடமும் ஓர் ஆசை வளர்ந்து வருகிறது. அதுதான் தலைவர் ஆகவேண்டும் என்ற ஆசை! அதற்காக எளிதாக முடியக்கூடிய காரியத்தைக்கூட அணுகாமல், பேசாமல் விவகாரமாக்குகிறார்கள்; கட்சியாக்குகிறார்கள். கொடிக்கம்பங்கள் தலை தூக்குகின்றன. இந்த நடைமுறை பாராளுமன்றத்திலிருந்து சிற்றூர்வரை வளர்ந்துவிட்டது. இனிய செல்வ, மக்களுக்கு ஒரு யோகம்? அடிக்கடி மேடைகளைப் பார்க்கிறார்கள்! பயன்