பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



451


என்றார் வள்ளுவர். இந்த நிலை மாறினாலேயே நாடு வளரும்; இதற்கு ஒரே வழி நாட்டு மக்கள் அனைவரும் அரசியலில் ஈடுபாடு காட்டுதல்! சமுதாய அமைப்புக்கு உழைத்தல், பொதுவாழ்க்கைக்கு என்று சில மணி நேரமாவது ஒதுக்குதல், பயத்திலிருந்து விடுதலை பெறுதல்!

இன்ப அன்பு
அடிகளார்
76. கூட்டாளி ஏன்?

இனிய செல்வ,

இன்று முயன்றாலும் ஒருவராய் வாழ முடிவதில்லை. இந்த உலகின் பரந்த எல்லைகளோடு தொடர்பு வந்தாய் விட்டது. நுகர்வன பலப்பலவாயின. அதனால் பொருள் தேவை அளவற்றதாகிறது. அது மட்டுமா? பொருள் இருந்தால் மட்டும் போதாது. சொத்தும் வேண்டும். தனி உடைமைச் சமுதாய அமைப்பு தோன்றிய பின் சொத்து தோன்றிற்று. காலப் போக்கில் சொத்தின் மதிப்பு, பலவாகக் கூடி, இன்று சொத்து மனித மதிப்பீட்டின் அடிப்படை ஆயிற்று. இஃது ஒரு எதிர்மறை வரலாறு, ஆயினும் நடந்துவிட்டது. நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பலரோடு கூடிவாழ்வது போல ஒரு தோற்றம்;

இனி செல்வ, உணர்வு ஒத்தவர்கள் பலர் கூடி வாழ்ந்தால் அற்புதங்கள் நடக்கும். அதிசயங்கள் நடக்கும். பலர் கூடித் தொழில் செய்துவாழும் பொழுது அறிவின் தெளிவு இருக்கும். ஆற்றல் மிகு விளங்கும். ஆனால், இன்று எண்ணிக்கையில் பலர்! வாழ்நிலையில் பலரின் சிந்தனையும் செயலும் கூடுவதில்லை. சில சமயங்களில் சிந்தனை குழம்பிப் போகிறது. நெப்போலியன் சொன்ன கழுதைக் கதைபோல் ஆகிவிடுகிறது. ஆம்! நம்முடன் ஓரிருவர் கூட்டு வாழ்க்கை நடத்த முன்வந்தாலே போதும். இந்தக் கூட்டு வாழ்வின் அறிவு, உணர்வு, செயல் அத்தனையும் இணைந்திருக்க