பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புகுந்து நடத்தும் திருவிளையாடல்! கொடுமை! கொடுமை ! மண்டையை உருளச் செய்து வருகிறது! பகைமை! உட்பகை! புறங்கறல்! சிறுமை செய்தல்! இனிய செல்வ, அழுக்காற்றின் காரணமாக நாம் எடுக்கும் குடி செயல் பணிகளுக்கு - நற்பணிகளுக்குக் கூடத் தடைசெய்தல், இடையூறு விளைவித்தல் இவையெல்லாம் நடக்கும்! பெருமை பார்ப்பர்! இவைகளால் குடி செயல் கெடும்! இனிய செல்வ! நீ பிறந்த குடியை வளர்ப்பதற்குரிய பணியைச் செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டாயா? உண்மையாக வந்து விட்டாயா? உறுதியாக நீ பிறந்த குடிக்கு உன் பணியைச் செய்வதை நோன்பாக ஏற்க உறுதி கொண்டுவிட்டாயா? அப்படியானால் யாரிடமும் நீ பெருமையை எதிர்பார்க்காதே! மானம், மரியாதை, மதிப்பு, அவமதிப்பு ஆகிய சொற்கள் இலட்சிய வாழ்க்கையைக் கெடுக்கும்! நாளும் நல்ல பணிகள் பல செய்வதைக் கெடுக்கும்! ஏச்சா? பேச்சா? பழியா? தாங்கிக்கொள்! அன்புகாட்டு! அன்புசெய்! அப்போதுதான் தமிழ்க் குடிக்கு ஏதாவது செய்ய இயலும்! எவரையும் யாரையும் நிலம் போலத் தாங்கு! இனமானத்தை இழந்து தன்மானத்தைக் காக்காதே! இனமானத்திற்குத் தன்மானம் முரண்படக்கூடியது!

இனிய செல்வ, உன்னோடு உடன்படாதவரோடும் உடன்பாடு காண முயலுக! உன்னைப் பழிதூற்றுவோரிடமும் நீ அன்பைப் பொழி! அப்போதுதான் நீ பாதுகாப்பு எல்லையைக் கடந்து பணி செய்யும் எல்லைக்குள் நுழைய முடியயும்! மேவ முடியயும்! இனிய செல்வ, இன்று தமிழ்க்குடி வாழ்வாங்கு வாழவில்லை! தமிழ் மொழி வளரவில்லை! ஆங்கிலமும், இந்தியும், ஆரியமும் தமிழின்மீது ஆட்சி செலுத்த முயலுகின்றன. தமிழ்க் குடும்பங்களில் சரிபாதிக் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ்! காவிரித் தண்ணீர் கிடைக்கவில்லை! இந்நிலையில் தமிழர் குடி ஒன்றுபடவில்லை! ஒன்றாக வாழக் கற்றுக் கொள்ளவில்லை, இன்று தமிழ்க்குடி பல குழு வயப்பட்டுள்ளது. குடி செய்யும்