பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



463


முயற்சியாண்டும் இல்லை! குழுக்கள் போராட்டம் நடக்கின்றது. இனிய செல்வ, தமிழ்க் குடியை வளர்க்க வேண்டும். நடக்குமா?

இனிய செல்வ, நமக்குதெரிந்து பிறந்து மொழி பயின்ற காலத்திலிருந்து தமிழ் நாட்டு வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் தமிழ்க் குடியினர் ஒன்றுபட்டு நின்ற காட்சியில்லை! இனிய செல்வ, யார் வந்தால் என்ன? வராது போனால் என்ன? நாம் ஒத்துப்போவோம்! ஒத்துழைப்போம்! தமிழ்க் குடியைக் காப்போம்!

"குடி செய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”

இன்ப அன்பு
அடிகளார்
80. மழைவளம் காப்போம்

இனிய செல்வ,

மழை பெய்திருக்கிறது. இல்லை, இல்லை! மழை கொட்டியிருக்கிறது! எங்கும் வெள்ளம்! இடிபாடுகள்! அழிவுகள்! பெய்த மழைத் தண்ணீரில் பாதி கடலுக்குப் போய்விட்டது! இப்படிப் பெய்த மழைத் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியிருந்தால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மழை பெய்தால்கூட போதுமானது. இடிபாடுகளையும் தவிர்க்கலாம். இனிய செல்வ, நமது பழக்கமே வேண்டும் போது தேடுவது; வந்தால் அனுபவிப்பது. எதிரதாக் காக்கும் அறிவும் இல்லை; பட்டறிவும் மிக மிகக் குறைவு. இன்றைய வாழ்வே நமது இலட்சியம்! நாளை என்பது நமக்கு இல்லை! எதிர்காலம் என்பது ஒன்று நம்மனோர் சிந்தனையில் இல்லை. இதுதான் நமது போக்கு! இந்த வகையில் வைதிக மதம் நம்மை குருடாக்கிவிட்டது.

தஞ்சை மாவட்டத்தில் பல ஏரிகளைத் தூர்த்து விட்டார்கள். திருச்சி மாவட்டத்திலும் ஏரிகள் தூர்ந்து கொண்டிருக்கின்றன. இனிய செல்வ, நாடு வளர்கிறது,