பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


84. சலுகைகள்-குடும்பங்கள் அடிப்படையில்

இனிய செல்வ,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை"

என்ற திருக்குறளைக் கற்றிருப்பாய் என்ற நம்புகின்றோம். இனிய செல்வ, செய்யும் காரியம் நல்லதா அல்லது கெடுதலா என்பது செய்யும் காரியத்தைப் பொறுத்தது மட்டும் அல்ல, அல்லது செய்பவரைப் பொறுத்தது அல்ல. யாரை நோக்கிச் செய்யப்படுகிறதோ அந்த நபரைப் பொறுத்தது என்பது திருக்குறளின் கருத்து. மேலும் ‘உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்றும் திருக்குறள் கூறுகிறது.

இனிய செல்வ, நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப் பெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நல்லதேயாயினும் பக்க விளைவுகளும் எதிர் விளைவுகளும் இல்லாமலில்லை, பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மனிதரை மேலே தூக்கி விடுதல் அவசியம் மட்டுமல்ல, சமூகத்தின் கடமையுமாகும். ஆனால், பள்ளத்தில் கிடத்தல் என்ற நிலையை அளவு கோலாகக் கொள்ளாமல் சாதிகளை அளவு கோலாகக் கொள்ளுதல் நடைமுறையில் சிறந்த கொள்கைதானா? சாதிகள் சமூகமாகிவிடுமா? ஒரு சாதியில், ஒரு சமூகத்தில் அனைவரும் பின் தங்கியவர்களாக இருத்தல் கூடுமா? இனிய செல்வ, இவையெல்லாம் ஆய்வுக்குரிய கேள்விகள், சமூகத்தின் பெயரில் சட்ட அடிப்படையில் ஒதுக்கீடு அமையுமாயின் முண்டியடிக்கும் தகுதியுடைய ஆற்றல் மிக்கவர்கள்-அரசின் கதவைத் தட்டும் சக்தியுடையவர்கள் தான் பயன் அடைவார்கள். கடை கோடி மனிதனுக்கு ஒன்றும் கிடைக்காது. ஏன்? பிற்பட்டோருக்குரிய அளவுகோலுக்கு இசைந்து உள்ள தனிக் குடும்பங்கள் அடிப்படையில் இட