பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



475


ஒதுக்கீட்டுச் சலுகைகளை வழங்கினால் அனைவருக்கும் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கடைகோடி மனிதனும் பயனடைவான்.

இனிய செல்வ, மக்கள் தொகுதியை மூன்றாகப் பிரிப்பது! முதல் வகைத் தொகுதியைச் சார்ந்த அனைத்து குடும்பங்களும் சமூகத்தால் அங்கீகரிக்கப் பெறாத குடும்பங்கள்; கல்வியில் பின் தங்கிய குடும்பங்கள்; பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள்; என்ற அடிப்படையில் இனம் கண்டு தாழ்த்தப்பட்ட சமூகமாகக் கருதி அனைத்துச் சலுகைகளையும் வழங்கலாம். இந்தத் தொகுதியைச் சார்ந்த குடும்பங்களுக்குக் குடும்ப அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும் உதவி. அதற்குப் பிறகு அந்தக் குடும்பத்தைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டு முன்னேறியோர் தொகுதியில் சேர்க்க வேண்டும். அது போலவே தொகுதி 2-ல் உள்ள குடும்பங்கள் மிகவும் பிற்பட்டோர். இந்தக் குடும்பங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையினர். இந்தக் குடும்பங்களுக்கும் காலக்கெடு அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்து உயர்த்த வேண்டும். வளர்ந்த குடும்பங்களைப் பிற்பட்டோரிலிருந்து நீக்கி முன்னேறிய குடும்ப வரிசையில் சேர்க்க வேண்டும். கடைசியாக உள்ளது மூன்றாவது தொகுதி. இந்தத் தொகுதியினர் பொருளாதாரத்தில் மட்டும் பின் தங்கியவர்கள், இந்தக் குடும்பங்களை, குடும்பங்கள் அடிப்படையில் அங்கீகரித்து உதவி செய்யலாம். -

இனிய செல்வ, இந்த நடைமுறையில் எல்லோருக்கும் உதவி கிடைக்கும். இனிய செல்வ, 1953-ல் 2720 ஆக இருந்த சாதிகள், 1983-இல் 3332 சாதிகளாகப் பல்கி பெருகி வளர்ந்து விட்டது தெரிகிறதா? ஏன்? சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுவதால் சாதிகளைக் காப்பாற்ற மக்கள் நினைக்கிறார்கள், காலப்போக்கில் மறைந்துபோன சாதிக்