பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



479


எல்லோருக்கும் கிடைத்துவிடும். அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவேண்டாம். ஆனால், மனிதன்-புவியை நடத்தும் மனிதன் வெற்றியினைப் பெற்றுக் குவிக்கும் மனிதன் தோன்றுவானா? இதுவே இன்றுள்ள பெரிய வினா? விடை சொல்லும் பொறுப்பு யாருடையது? ஆம்! ஆட்சியாளர்கள் முதலில் பதில் கூறவேண்டும். சமூகமும் குடும்பமும் அடுத்த நிலையில் பதில் கூறவேண்டும். பதில் கிடைக்குமா?

இன்ப அன்பு
அடிகளார்


86. இட ஒதுக்கீடு

இனிய செல்வ,

தமிழகம் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. ஆம்! இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தான்! 1924-ல் தொடங்கிய இடஒதுக்கீடு தொடர்ந்து நடக்கிறது; என்றென்றும் தொடரும் போல இருக்கிறது! இனிய செல்வ, பின் தங்கியதற்குரிய நிலைகள் மாற்றப்படாமல் நாற்காலிகள் வழங்கப்படுவதால் மட்டும் பின்தங்கிய நிலை மாறுமா?

இன்றைய கல்விப் போக்கு என்ன? ஆரம்பப் பாடசாலைகள் முதல் சேர்கிற மாணவர்கள் அனைவரும் உயர்நிலைக் கல்விக்கும் அதற்கு மேல் கல்லூரிக் கல்விக்கும் வருவதில்லை. இனிய செல்வ, உன்னுடைய கேள்வி சரியானது! இடைத்தங்கல் ஏராளம்; இடைமுறிவுகளும் ஏராளம்! தோராயமாகக் கணக்கிட்டால் 10 விழுக்காடு மாணவர்கள் தான் கல்லூரிக் கல்விக்கு-ஆராய்ச்சிப் படிப்புக்கு வருகிறார்கள். இதிலும் சராசரி மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குறிய மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குரிய மதிப்பெண் அளவே குறைக்கப்பட்டு விட்டன! அதிலும் ‘தான மார்க்கு’கள் வேறு. இனிய செல்வ, இந்த நிலை நீடித்தால் எங்ஙனம் பின்தங்கிய நிலை மாறும்?