பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போராடி விடை காணமுடியாமல் எய்த்துக் களைத்துப்போய் பாராளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியே வந்து பாராளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு மறியலும் ஆர்ப்பாட்டமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இனிய செல்வ, எதிர்க்கட்சிகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்கிறாயா? ஊழல்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை! இதைச் செய்ய நமது பிரதமர் யோசிக்கிறார்! ஏன்? காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் உண்டு! இதில் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி உடையும்! நாடாளுமன்றத்தில் பலம் இழக்கக்கூடும்! அதனால் ஆட்சி கவிழும் அபாயம் உண்டு! ஆதலால் பிரதமர் நரசிம்மராவ் தயங்குகிறார். எதிர்க்கட்சிகளும் பிடிவாதத்தைத் தவிர்க்க முன்வரவில்லை.

இனிய செல்வ, பழைய காலத்தில் ‘ஊழல்’ என்று பேச்சு அடிப்பட்டாலே அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தனர். டி.டி.கே, ஆர்.கே.சண்முகம் ஆகியோர் ராஜிநாமாக்கள் முன்னுதாரணங்கள்! ஆனால் இன்றோ போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.

இனிய செல்வ, நாட்டு மக்கள் பெருவாரியான வாக்குகள் மூலம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். பிரதமராக நரசிம்மராவைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

"தேரான்தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறம்
தீரா இடும்பை தரும்"

என்ற திருக்குறள் நெறிப்படி பார்த்தால் பிரதமர் நரசிம்மராவுக்கு இடையூறில்லாமல் காங்கிரஸ் ஆட்சியை நீடிக்க அனுமதிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. எதிர்க்கட்சிகளால் ஆட்சியும் அமைக்க இயலவில்லை! எதிர்க்