பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



485


"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்!”

இன்ப அன்பு
அடிகளார்
88. இட ஒதுக்கீட்டுக் கொள்கை

இனிய செல்வ,

புஸ்வானம் வந்துவிட்டது! வெடித்து விட்டது! அது என்ன என்கிறாயா? அதுதான் சமூகநீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை! 69 விழுக்காடு இட ஒதுக்கீடு!

'சமூகம்’ - என்ற சொல் சாதியைத்தான் குறிக்கும். 'சமுதாயம்’ என்ற சொல் பொதுவாக மக்கள் சமுதாயத்தைக் குறிக்கும். சாதிமுறை அமைப்பும், அதனால் ஏற்பட்ட தாழ்வுகளும் நாடறிந்தவை. அதனாலேயே வள்ளுவமும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கூறியது. மனிதரில் பள்ளத்தில் கிடக்கிறவர்களை மேலே தூக்கிக் கொண்டு வரவேண்டியது அவசியம்., கடமையும் கூட! பள்ளத்தில் கிடப்பவர்களில் சாதி பார்த்துச் சிலரைத் தூக்குவது, சிலரைப் பள்ளத்திலேயே போட்டு விடுவது என்பது எப்படி நீதியாகும்? பள்ளத்தில் கிடப்பவர்களிலும் கூடச் சிலர் புறக்கணிக்கப் படுகின்றனர் சாதியின் பெயரால்!

இனிய செல்வ! அதுகிடக்கட்டும்! குறிப்பிட்ட சாதிகளில் கூடப் பள்ளத்தில், படுகுழியில் கிடப்பவர்கள் மேலேறவில்லை. அவர்களிலும் தமது இயல்பூக்கத்தினால் கையை மேலே நீட்டி ஏற முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் இட ஒதுக்கீட்டுக் கொள்கை சென்ற காலத்தில் பயன்பட்டிருக்கிறது. இனிய செல்வ! சுதந்திரம் வந்து 47 ஆண்டுகளுக்குப்பிறகு பிற்பட்டோர் பட்டியல், மிகவும் பிற்பட்டோர் பட்டியல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போவது ஏன்? இனிய செல்வ, ஒரே பாராளுமன்றத்தொடரில், இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சட்ட வரைவாக்கம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருகிறது. அதே