பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களைப் போல நடத்தும் மனப்போக்கு மெள்ள மெள்ள வளர்கிறது; வளர்ந்து வருகிறது. காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம், காங்கிரஸ் கொள்கைகளை ஏற்காதவர்கள் கூட அதன் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர்கள், சலுகைகளையும் பெற்றனர். சலுகையும் முடிந்தது. கட்சியைக் கைவிட்டு விட்டனர். ஆதலால் ஆளும் ஆட்சி முறையில் கட்சி வாசனை தலைக்காட்டக்கூடாது.

இனிய செல்வ, இட ஒதுக்கீட்டுக் கொள்கை வெற்றி பெறட்டும்! நமது வாழ்த்துக்கள்! பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்! இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்புக்கள் விரிவாக்கப்படுமா? அடுத்த நூற்றாண்டிலாவது எல்லோரும் எல்லாம் பெறுவார்களா?

இன்ப அன்பு
அடிகளார்
89. பிளேக்–நோய்கள்

இனிய செல்வ,

நோய்கள் பரவுகின்றன! ஆம்! பிளேக்கையும் சேர்த்துத் தான் கூறுகின்றோம்! இனிய செல்வ, இன்று பிளேக் மட்டுமா பரவுகிறது? பிளேக் நோய் உடனே கொல்வதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். நித்தம் சாகடித்துக் கொண்டேயிருக்கும் வியாதிகள் பலப்பல! சாவதைவிடக் கொடியவை நாள் தோறும் அடையும் துன்பங்கள்! துயரங்கள்! வன்முறைகள்! வாழும் முறைமை அறியாநிலை! அறிந்தாலும் வாய்ப்புக்கள் இல்லை! வாய்ப்புக்கள் என்ன, நமது வீட்டுக் கதவைத் தட்டுமா? ஐயோ, பாவம்! இன்று நல் வாய்ப்புக்கள் வந்து வீட்டுக்கதவைத் தட்டினாலும் திறக்க மறுக்கும் மதோன் மத்தர்களின் எண்ணிக்கையே மிகுதி! எங்கும் நீக்கமற நிலவும் அசிரத்தை நோய்க்கு ஏது மருந்து?

இனிய செல்வ, சூரத் நகரம் ஒரு பெரிய நகரம்! நகராட்சி நடந்து வந்திருக்கிறது! ஆயினும் நகரம் சுத்தமாக, சுகாதாரமாகப் பேணப்படவில்லை, என்பதை பிளேக் நோய்