பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

504

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பேராசிரியர் அ.தேவராசன் ஆகியோர் முன்னின்று உழைத்தனர். பேராசிரியர் அ.தேவராசன் இத்துரையில் அடிக்கடி கருத்தரங்குகள் நடத்தினார். நாம் பல் கருத்தரங்குகளில் கலந்து கொண்டதுண்டு. அதுபோது கல்வி அமைச்சர் தமிழைப் பயிற்றுமொழியாக்க ஒத்துக் கொண்டார். ஆனால் கலைப் (Arts) பாடங்களுக்கு முதலில் சம்மதித்தார். காலப்போக்கில் அறிவியல், தொழிற் கல்வி முதலியவற்றில் தமிழை அறிமுகப்படுத்தலாம் என்றார். அதோடு தமிழ் வழிக் கல்வி மட்டும் அல்லாமல் ஆங்கில வழிக்கல்வியும் ஒரு வகுப்பு இருக்கும் என்றார். அது தான் வினையாயிற்று. அப்போது தமிழ்நாட்டில் தீவிரப் பிரச்சாரம் ஆங்கிலத்தை அகற்றினால் இந்தி வந்துவிடும் என்பதாகும். தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நிதி உதவியும் செய்ய அரசு முன்வந்தது. ஆயினும் நல்ல புத்திசாலி மாணவர்கள் ‘தமிழ் வழிக்கல்வி’ கற்க முன்வரவில்லை. இந்த நிலையைக் கண்டு டாக்டர் கலைஞர் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கற்றோருக்கு முன்னுரிமை கொடுத்து ஆணை பிறப்பித்தார். இனிய செல்வ, அந்த ஆணையத் தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்த்தார்கள்; போராடினார்கள். பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தன. இந்நிலையில் பலருடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த ஆணையை அரசு திரும்பப்பெற்றது. இன்றும் சரி! ஆங்கில வழிக் கல்வி விரும்பப்படுகிறது. ஏன்? 'எல்லாரும் சமம்’ என்பது உறுதிசெய்யப்படவில்லை. சமூக மேலாதிக்கம் அதற்குக் காரணம்.

தமிழில் ‘அறிவியல் தமிழ்’ என்ற தமிழைத் தந்த பெருமை விஞ்ஞானி வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கே உரியது. அறிவியல் தமிழ் என்ற வழக்கைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அதன்பின் பேராசிரியர் கை.இ.வாசு என்ற சிறந்த விஞ்ஞானி; காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் அவர் இயக்குநராகப் பணி