பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறியில்தான் சாத்திர நெறிகளுக்கிடையே முரண்பாடுகள் தோன்றும்போது ஒழுக்க நிலையில் உறுதிப்பாட்டையும் காண்பதில்லை; திருத்தமும் காண்பதில்லை. நமது நாட்டில் வரைவின் மகளிர் பழிப்புக்கு ஆளாயினர். இந்தச் சூழ்நிலையை விளக்குவதுதான் வரைவின் மகளிர் அதிகாரம்.

இனிய செல்வ, இரண்டு அதிகாரங்களை வைத்துக் கொண்டு திருக்குறள் பெண்ணியத்தைப் பெருமைப் படுத்துவதில்லை என்று கூறுவது தவறு. இனிய செல்வ, குடும்ப இயலில் வாழ்க்கைத் துணை நலம் என்ற தனி அதிகாரமே அமைத்து, பெண்ணை ஓர் ஆணின் வாழ்க்கைக்குத் துணை என்று கூறுகிறார். இல்லை, இல்லை! வாழ்க்கைத் துணைநலம் என்றே கூறுகின்றார். தகுதி மிகுதியும் உடைய மனைவியை ஒருவன் பெற்றால் அவன் தன்னை இகழ்வார்முன் பீடு நடைநடக்க இயலும் என்று கூறுகின்றார். இனிய செல்வ, "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்று வினவுகின்ற திருவள்ளுவர் பெண்ணைப் பெருமைப்படுத்துகின்றார் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இன்ப அன்பு
அடிகளார்

குறிப்பு: அடிகளார் தம்மறைவிற்கு முன்னர் மருத்துவ மனையில் இருந்தஞான்று ‘வள்ளுவர் வழி’க்கென்று வரைந்த இம்மடலே அடிகளாரின் இறுதி எழுத்துப் பணியும் ஆகியது. அந்தோ!

- ஆசிரியர்