இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
iv
| 1951 | ● | காரைக்குடிக் கம்பன் விழாவில் 'புதரிடைமலர்' என்ற தலைப்பில், அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு. |
| 1952 | ● | குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளல். |
| ● | அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம். | |
| ● | 'மணிமொழி' என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல். | |
| 1953 | ● | ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல். |
| ● | பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல். | |
| ● | இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம். | |
| 1954 | ● | இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு. |
| ● | திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு. | |
| ● | தாய்லாந்து, இந்தோசீனர், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்) | |
| 1955 | ● | அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல். |
| ● | 'தமிழ்நாடு' நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல். | |
| ● | அறிஞர் அண்ணர் குன்றக்குடி திருமடத்திற்கு வருகை. | |
| ● | ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை. | |
| 1958 | ● | குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல். |
| 1959 | ● | ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்; பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை. |
| 1960 | ● | மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல். |