பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்விழுக்குப் பட்டு.’

127

மக்கள் வேறு எவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க. நாவைக் காவா விடின் சொற்குற்றப்பட்டுப் பெருந்துன்பம் அடைவர்.

1. பொறிகளையும் புலன்களையும் மற்றவர்க்குத் தீமை செய்யாவண்ணம் அடக்கி ஒழுகுதல் நல்லொழுக்கம்.

2. இங்ஙனம் எல்லாப் பொறிகளையும் புலன்களையும் அடக்காது போனாலும் நாவையாவது அடக்கி அதாவது வாய்ப்பேச்சை அடக்கி ஒழுகுதல் இன்றியமையாதது.

உலகின் எல்லாத் தீமைகளும் வாயினால்தான் தோன்றின. கோள்சுறல், புறங்கறல், பழிதூற்றல் முதலியன கொடிய எதிர்விளைவுகளை உண்டாக்க வல்லன. ஆதலால், வாயை அடக்கிப் பேசினாலே பல தீமைகளை வெற்றி கொள்ளலாம்.

3. கோள் என்பது ஒருவரைப் பற்றி, மற்றொருவரிடத்தில் இல்லாததைச் சொல்லித் தப்பான எண்ணத்தை உருவாக்கல்; பிரித்தல்; பகை கொள்ளச் செய்தல். இது ‘குறளை’ என்றும் வழங்கப்படும்.

4. புறங்கூறல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தவறான கருத்து உண்டாகுமாறு செய்திகளைக் கூறல். ஆனால், அவரே நேரில் காணுமிடத்தில் பாராட்டுதலும் செய்தல். இது முறையன்று. அப்பரடிகள் "குற்றங்கள் பேசியும். குணங்களைப் பேசியும்" என்பார்.

5. பழிதூற்றல் என்பது; குற்றம் குறைகளே இல்லாத மனிதர் உலகத்தில் இல்லை; இருத்தல் இயலாது. ஒருவரின் குணங்களை மறைத்து விட்டு, அவரிடம் உள்ள குறைகளையே பலரறியக் கூறுதலால் குற்றங்கள் நீங்காதது மட்டுமின்றிப் பழியும் பகையும் வளரும். குற்றங்களுடையவரிடம்