பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



109



18. வெஃகாமை

வெஃகல்-விரும்புதல். இயற்கையில் விருப்பம் தவறுடையதன்று. உயிர்களின் விருப்பங்கள்தாம் மனித குலத்திற்குப் புதியன கானும் ஆர்வத்தைத் தருகின்றன. இந்த ஆர்வம் படைப்பாற்றலாய் வளர்ந்து வளர்ந்து புதிய நுகர்வுப் பொருள்களைப் படைத்துத் தரும். ஆதலால், இயற்கையில் வெஃகல் தவறன்று. ஆனால், விருப்பங்கள் தன்னுடைய ஆற்றல், உழைக்கும் தகுதி, சமூகத்தின் இயல்பு ஆகியவைகட்கு ஏற்றனவாக இருக்கவேண்டும். தன்னுடைய ஆற்றலுக்கும் சமூகத்தின் அளவுக்கும் இசைந்தவாறு இல்லாமல் மிகையாக விரும்புதல் ஒழுக்கக் கேடாகும். இப்பண்பின் மிக்க நிலையே இவறல், எனப்படும். இத்தகைய முறைகேடான விருப்பங்களை விலக்குவது ‘வெஃகாமை’ அதிகாரத்தின் நோக்கம்.

‘நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.’

171

நடுவுநிலை பிறழ்ந்து பிறருடைய நற்பொருளிடத்து ஆசை வைத்தால் குடி கெடும்; குற்றமும் உண்டாகும்.

‘நன்பொருள்’ - என்றது உழைப்பினால் ஈட்டிய பொருளை உணர்த்தற்கு.

தன்னுடைய காலத்தையும் ஆற்றலையும் உழைப்பில் பயன்படுத்தித் தன்னுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய ஈட்டத்திற்கு மேற்பட்ட வகையில் நுகர்தலை வளர்த்துக் கொள்ளக்கூடாது.

தன்னுடைய உழைப்பில் வாராத எதையும் விரும்புதல் கூடாது. மற்றவர் கொடுத்தாலும் தாம் உழைக்காமல் நுகர்தல் என்னும் பழக்கத்தை ஊக்குவிக்குமாகலால் மறுத்தலே நல்லது. இக்கருத்தைத் திருவள்ளுவர் பிறிதோரிடத்திலும்