பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"நல்லாறு எனினும் கொளல் தீது” என்றார். எந்தச் சூழ்நிலையிலும் பிறர் பொருளை நஞ்சு எனக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும். தான் ஈட்டிய பொருளுக்கு எவ்வளவு மதிப்பு, உண்டோ அதே மதிப்பை மற்றவர் பொருளுக்குந் தருதல் வேண்டும்.

நாம் உழைத்து ஈட்டிய பொருளை நம்முடைய உழைப்பில் பங்கு பெறாத ஒருவர் விரும்பிக் கேட்டாலோ, களவுத் தனமாக எடுத்தாலோ நமக்கு எவ்வளவு ஆத்திரம் வருமோ அதே போல் பிறர் பொருளை நம் மனம் விரும்பும் போது நம்மை நாமே ஆத்திரத்தால் தாக்கிக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

'படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.’

172

நடுவு நிலை பிறழ்ந்து வாழ்ந்திட அஞ்சி நாணுபவர்கள் பயன் கருதிப் பிறர் பொருளை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

வாழ்க்கை யென்பது பல நோக்குடையது. அறிவு, ற்றல், அன்பு, அருள், திறன், ஒழுக்கம், இன்பம் ஆகியன அனைத்தும் அமைந்த வாழ்க்கையே பயனுடைய முழுமையான வாழ்க்கை. இத்தகைய முழுமையான வாழ்க்கையை உழைத்துப் பொருளீட்டி முறையாக வாழ்ந்தால்தான் அனைத்துப் பயனும் கிடைக்கும். மேற்கூறிய வாழ்க்கைப் பயன்களில் ஒன்றிருந்து ஒன்றில்லையானாலும் வாழ்க்கை முழுமையாகாது. முழுமையான பயன்களை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளாமல் ஒன்று அல்லது இரண்டை அதாவது அப்பட்டமான நுகர்வை மட்டுமே விரும்பினால் வாழ்க்கை வளராது; முழுமையுறாது. அது மட்டுமன்று. ஊரார் பணத்தில் "மஞ்சட் குளிப்பவர்" என்று பழிக்கப்படும் நிலையும் ஏற்படும். அதனால் சாதாரணப் பயன்களைக்