பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



10. ஒருவர் தம்முடைய பொருந்தாப் பழக்கத்தை மறைத்துக் கொள்ளும் மனப் போக்கிலும் புறங் கூறல் தோன்றும்.

11. தனக்குத் தகுதியில்லாத ஒன்றை அவாவி அது தகுதியின்மையின் காரணமாக மறுக்கப்படும் பொழுதும் தகுதியின்மையை மறைத்துக் கொள்ளும் நிலையில் புறங்கூறல் தோன்றும்.

12. ஒருவருக்குரியதை ஏமாற்றித் தனது உடைமையாக்கிக் கொள்ளும்போது ஒரோவழி புறங்கூறுதல் தோன்றும்.

13. ஒருவர் முறையாக உழைத்து நல்லின்பத்தை அடைந்து துய்த்தலும் அது போலத் தாம் இன்புறுவதற்குரிய விலையாகிய உழைப்பைக் கொடுக்காமல் வாழ விரும்புகிற போதும் புறங்கறுதல் தோன்றும்.

14. தன்னுடைய பகைவனை முறையாக வெற்றி கொள்ள முடியாத நிலையிலும் தோன்றும்.

15. ஒருவருடைய குற்றத்தை அவர்முன் சொல்லும் நெஞ்சுர மின்மையின் காரணமாகவும் புறங்கூறல் தோன்றும்.

புறங்கூறல் என்கிற குற்றத்தைத் தவிர்க்கும் செயல்முறைகள்

1. மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மை வேண்டும்.

2. மற்றவர்கள் மகிழ்ந்து இன்புற்று வாழ்வதைக் கண்டு மகிழும் மனப்பாங்கு வேண்டும்.

3. அழுக்காறு கொள்ளுதல் கூடாது.

4. யாரினும் தாம் அறிந்தவர் உயர்ந்தவர் என்கிற மனப்போக்குக் கூடாது. அடக்கமும் எளிமையும் வேண்டும்.