பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. "தமியர் உணல்" என்றதால் தனியே உண்டல் கூடாது; பலரோடு கூடி உண்க என்பதாகும்.

‘சாதவின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.’

230

ஒருவருக்குச் சாதல் போலத் துன்பமானது இல்லை. ஆனால், வறியோர்க்கு உதவி செய்ய இயலாதபொழுது சாதலும் இன்பம் தரும்.

பயன்படாது வாழ்தலின் சாதல் நன்று என்பது கருத்து.

24. புகழ்

புகழ் மானிட வாழ்க்கையின் இம்மைப்பயன். ஒருவனுடைய வாழ்க்கை மூலம் பயன் அடைந்தவர்கள் பாராட்டிக் கூறுவது புகழ். இன்று புகழ் என்பது விற்பனைப் பொருளாகவும் விளம்பரப் பொருளாகவும் ஆகிவிட்டது. திருவள்ளுவர் கூறும் புகழ், வாழ்க்கையில் விளைவது; வாழ்க்கையின் பயன். அறத்துப் பாலில் இல்லறவியல் முடிவில் புகழ் அதிகாரம் வைக்கப் பெற்றுள்ளது. ஏன்? ஒருவருடைய இல்வாழ்க்கை அறஞ்சார்ந்த வாழ்க்கை என்பதை அவரை மற்றவர்கள் புகழ்ந்துரைக்கும் உரைகளின் வாயிலாகவே அறியமுடியும் என்பதை உணர்த்தவேயாம். அடுத்து, துறவறம் தொடங்குகிறது. துறவுக்குப் புகழ் உரிய தன்று. துறவு, புகழ், பழிகளைக் கடந்தது. ஆனால், இன்றோ இல்லறத்தாரை விடத் துறவிகளே புகழ் வேட்டையாடுகின்றனர். துறவிகளிடத்தில் புகழ் வேட்கை தலையெடுத்ததுடன் விளம்பர மனநிலையும், பொய்யும் நடிப்பும் மிகுந்து வளர்ந்து வருகின்றன.

பொதுவாக, இல்லற வாழ்க்கை இறுக்கமான பாசத்தை பொருட்பற்றை உருவாக்கும் என்பது உலகியல் நடைமுறை. இதன் காரணமாகத் தன்பெண்டு - தன்பிள்ளை என்ற