பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



153



1. புலாலை உண்ணும் பொழுது - அறுக்கப்படும் பொழுது உயிர்கள் துடித்து வருந்துதலை நினைந்து பார்த்திடுக. அதனால், ஊன் உண்ணும் வேட்கை எழாது; தடைப்பட்டுப் போகும்.

2. புலாலை உண்ணுவதற்காக ஒருயிரை வருத்தி அறுக்கும் பொழுது அதனை ஒத்த துன்பம் நமக்கு வந்தால் நாமுறும் பாட்டை நினைந்து பார்த்திடுக. அதனால் உயிர்க் கொலை தவிர்க்கும் வாய்ப்பு மிகும்.

3. உடலியக்கத்திற்குத் தேவையான ஆற்றல், காய், கனிகளிலும் கிடைக்கும். அவை ஓரறிவுயிர். அறிவு மிக மிக இனவளர்ச்சி குறைதலை மனங் கொள்க. அதனால் புலால் உண்ணல் தவிர்க்க முடியாதது என்று கருத வேண்டாம்.

4. பொருளின் இன்றியமையாமை கருதி அருளுடைமையும் கூறினார். பொருள் வருந்தித் தேட வேண்டும். தேடிய பொருளை வீணாகச் செலவழிக்காமல் போற்றிப்பாதுகாக்க வேண்டும். அதாவது, சிக்கனமாய் வாழ்தல். சிக்கனமென்பது இவறுந் (உலோபத்) தன்மையன்று. சிக்கனம் பொருள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

‘படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்.’

253

கொலை செய்யும் கருவியைத் தம் கையில் கொண்டவரின் மனம் கொலையையே நோக்கும்; அருளை நோக்காது.

படையைக் கையிலெடுக்கத் துணிந்தவர்கள் கொலையையே குறிக்கோளாகக் கொள்வர். படை கொண்டார் மனம் அமைதி, சமாதானம், நட்புறவு இவைகளைப் பற்றிக் கருதாது; பிறிதோர் உயிரின் துன்பம் பற்றிக் கருதாது கொலை செய்த உடலைச் சுவைத்து உண்டவர்களின் மனம் அருளை நோக்காது.