பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



புலால் உணவு கொலைத் தொடர்புடையது. ஆதலாலும் அதனுடன் சேர்க்கப் பெற்ற உணர்வு வகையாலும் புலால் உண்டவர் மனம் நன்மையைக் கருதாது; நன்மையின்பாற் செல்லாது.

1. எந்தச் சூழ்நிலையிலும் படைக்கருவிகளைத் தொடக்கூடாது.

2. ஏமாற்றங்கள் - கோபங்கள் ஏற்படும் போது படைக் கருவியைக் கட்டாயம் தொடக் கூடாது.

3. படைக் கருவியைக் கையில் எடுத்தல் கொலை செய்வதில் கொண்டுபோய் விடும். ஆதலால், மறந்தும் படைக் கருவிகளை எடுத்தல் கூடாது.

4. கையில் தாங்கும் கருவிகள், நெஞ்சத்தை இயக்கும் தகுதியை உடையன. விழிப்புணர்வுடன் இருந்து நெஞ்சத்தினைப் பேணுக.

5. உணவு முறையால் நெஞ்சத்தின் இயல்புகள் மாறுவதை அறிந்து நெஞ்சத்தினை நன்னெறியில் செலுத்தாத உணவைத் தவிர்த்திடுக.

‘அருளல்லது யாதெனில் கொல்லாமை; கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.’

254

அருள் யாதெனில் கொல்லாமை; அருளல்லது யாதெனில் கொல்லுதல். கொலையின் வழி கிடைத்த புலாலைத் தின்னுதல் பொருளல்லாத செயல்.

"பொருள்" - நிலையான வாழ்வளிக்கும் பயனைப் பொருள் என்றார்.

அருளுடைமை என்பதே கொல்லாமை என்று வலியுறுத்தியது.

1. தட்டில் இட்டுண்ணும் புலால் கொலையினால் வந்தது என்பதை எண்ணுக; உணர்க! அப்போது