பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2



திருவள்ளுவர் காட்டும் அரசு

நம்முடைய மொழி காலத்தோடு கலந்து வளர்ந்திருக்கிறதா? வளரவில்லையே! அது வளர வேண்டாமா? இவை நம் முன் உள்ள வினாக்கள்!

இன்னமும் நாம் “தமிழிலே அறிவியலைக் கொண்டுவர முடியுமா? முடியாதா?’ என்று திருவுளச்சீட்டுப் போட்டுக்கொண்டு இருக்கின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தத்துவங்களைப்பற்றி- மெய்யியல் தத்துவங்களைப் பற்றி-கட்புலன்களுக்கு வாராத தத்துவங்களைப்பற்றி, மிக எளிய நடையில் பேசிய மொழியை, பருப்புலனுக்கு வரக்கூடிய பொருளுக்கு ஆய்ந்து, அதைப் பற்றிச் சொல்வதிலே அந்த மொழிக்கு ஆற்றல் இருக்காது என்று சொன்னால் நாம் எங்ஙனம் நம்புவது?

இல்லாத ஒன்றை, வெற்றுக் கற்பனையாகத் தமிழில் சில உண்டு என்று சொன்னால் நாம் நம்ப வேண்டாம். ஆனால் சில தமிழிலே உண்டு என்பதை நாம் கருதாது போனால் நமக்கு ஒரு தன்னம்பிக்கை இருக்காது.

ஆனால் தமிழில் இவை உண்டு என்று இருக்கின்றவற்றைக் கருதாதுபோனால் நமக்கு மேலே தாண்டிப் பறக்க