பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



165



திருவள்ளுவர் அரசைக் காட்டுகிறார். அந்த அரசு ஒரு உச்ச வரம்பு உடையது அன்று. அந்த அரசு மக்களைக் கட்டி மேய்க்கின்ற அமைப்பு அன்று. அவனுக்கு ஏவல் செய்து, நலம்செய்ய வல்ல ஒரு சேம வைப்பு. இன்னும் சொல்லப் போனால், கடவுளிடத்தே நேரிடையாகச் சென்று முறையிட்டுக் கொள்ள முடியாததினால் அதை அரசனிடம் முறையிட்டுக் கடவுளின் பிரதிநிதியாக நினைக்கச் செய்கின்ற இடம்.

இங்கே திருவள்ளுவருக்குரிய அரசியல் அமைப்பிலே, 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைக்கு மிகப் பெரிய நாடுகளாகக் கருதப்பெறுகின்ற இங்கிலாந்து, அமெரிக்கா, சோவியத் யூனியன் எப்படி இருந்தன, எங்கு இருந்தன, அவற்றில் என்ன அரசு இருந்தது என்பவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மோடு ஒத்துவரக் கூடிய, கிட்டத்தட்ட கொஞ்சம் நாகரிக அமைப்பிலே, தகுதியிலே, ஒரு நாடு இருக்குமானால், அது கிரேக்க நாடு ஒன்றுதான். அது அந்தக் காலத்தில் இருந்து வந்திருக்கிறது. அந்த அரசு கூடத் திருவள்ளுவர் காண்கின்ற அரசு அன்று.

சாக்கரட்டீஸ்கூட ஏதன்ஸ் நகர அரசைத்தான் அரசு என்கிறார். ஒரு சின்ன நகராட்சி அமைப்புத்தான் அங்கே அரசாகக் காணப்படுகிறது.

இப்படி நாடுகளைக் கடந்து, மொழிகளைக் கடந்து, இனங்களைக் கடந்து ஒரு ஒப்பற்ற பேரரசை உருவாக்குகின்ற சக்தி அதற்குரிய அமைப்புக்கூட பிளாட்டோவின் அரசியலுக்குக் கிடையாது.

சிறு சிறு நகரங்களாக அமைகின்ற சிறு அமைப்புகள்-நகராட்சி எவ்வளவு சுலபமானது என்பது நமக்குத் தெரியும். நாட்டாட்சியைவிட நகராட்சி சுலபமானதுதான். ஆனால்