பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



183


பொருள்’ புதையல் மட்டுமல்ல. வழிவழி வாரிசு இன்றிப்போனால், அந்தச் சொத்தும் அரசுக்குச் சேரும்.

இப்பொழுது யாரும் அரசுக்கு வழிவழிச் சொத்துக்களை விடுவதில்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால், அரசு மீது அவர்களுக்கு மிகவும் நம்பிக்கை இல்லாது போனதினாலேயே, வழிவழிச் சொத்தை அரசிடம் தர அவர்கள் தயாராக இல்லை.

யாராவது இறக்கின்ற நேரத்தில், சொத்து அரசுக்குப் போய்விடக்கூடாதே என்று ‘ஸ்வீகாரம்’ செய்ய எண்ணுகிறான். அவன் அவ்வாறு செய்யவில்லை என்றால் கூட, அந்தச் சொத்துக்கு ஆசைப்பட்டவன் அந்த இறந்தவனுடைய கட்டை விரலை மை தடவி உருட்டியாவது, பொய்ப்பத்திரம் தயார் செய்துவிடுகிறான்.

ஆனால் திருவள்ளுவர் காலத்தில் வாரிசு இல்லாதவர்களுடைய பொருள், மக்கட்பேறு இல்லாதவர்களுடைய பொருள், அரசுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

ஆக, உறுபொருள் என்று சொல்லுகிறபொழுது, நிலத்திலே புதைந்து கிடக்கின்ற புதையல்கள் வாரிசு இல்லாமல் போகின்ற பொருள்கள் ஆக இரண்டு பொருளும் அரசுக்குச் சொந்தம்,

‘உல்குபொருள்’ என்று சொல்லுகிறார். திருவள்ளுவருக்கு இந்த நாட்டினுடைய சுயதேவையைப் பற்றி எவ்வளவு அக்கறை!

உள்நாட்டுப் பொருள் எதற்கும் அவர் வரி போடவில்லை. அயல் நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகும் பொருள்களுக்குச் சுங்க வரி என்று இப்பொழுது போடுகிறார்களே அதை வள்ளுவர் ‘உல்குபொருள்’ என்று அப்போதே சொல்லியிருக்கிறார்.

அந்தப் பொருட்களுக்கு வரி விதித்ததன் காரணம் என்ன? அயல் நாட்டின் பொருள்கள் நம் நாட்டிலே செலா