பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



185



நம்முடைய பேரரசுகள்-சேர, சோழ, பாண்டியர்கள் பல கோயில்களுக்கு, பல இடங்களை, பல கிராமங்களை இனாமாக வழங்கி இருக்கிறார்கள்.

அப்பொழுது நிலத்தை உழுகின்றவனுக்கு உழுகின்ற உரிமை தவிர, நிலத்திலே வேறு விதமான உரிமை இல்லாமல் அரசுக்கு நிலம் சொந்தமாக இருந்தது.

ஆகையினாலேதான் அரசர்கள் நிலத்தைத் தம்முடைய விருப்பம் போல் வழங்கியிருக்கிறார்கள்.

ஆகவே, இந்த நிலத்திலே, வழங்கப்பட்ட நிலம் போக, யாரும் பயன்படுத்தாத, பட்டா வாங்காமல் இருக்கிற நிலம் போக மற்ற நிலங்களில் வருகின்ற பொருள் இருந்திருக்கலாம். அது அவனுக்குச் சொந்த உடைமையாகவே இருந்திருக்கிறது.

“நிலம் பொதுவெனப் பொறான்”

என்பது புறநானூற்றுப் பாட்டு. நிலத்தைப் பொது என்று சொல்வதைத் தாங்கிக்கொள்ள மாட்டான். அது அரசுக்குள்ளேயே என்று வந்தாலுங்கூட!

அரசுக்கு நிலம் சொந்தமாகவே இருந்து வந்திருக்கிறது. இது நமக்கு வழக்கிலேகூடத் தெரிந்து வந்திருக்கிறது.

அரசன் இனாமாகக் கொடுத்தானேயானால், எப்படி மற்றவர்க்குச் சொந்தம் ஆக இருந்திருக்கமுடியும்? ஆகையினால் அரசுதான் நிலத்தின் உடைமைக் கர்த்தாவாக இருந்திருக்க முடியும்.

இனி மனிதர்களைப்பற்றிப் பேசுகின்றபோது, வள்ளுவர் வேறு உடைமைகளைப்பற்றிப் பேசாமல், ‘ஊக்க முடைமை உடைமை” என்று சொல்லுகின்ற பொழுதில் எல்லாம், உள்ள ஊக்கந்தான் உடைமையே தவிர, காணி, பூமி உடைமை என்று சொல்லவே இல்லை.

ஆகையினாலே, வள்ளுவர் பின்னாலே வந்த மார்க்ஸ் முனிவருடைய சித்தாந்தப்படி உற்பத்திக் கேந்திரங்கள்