பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



191



நீ மற்றவருடைய ஒழுக்கத்தை வளர்க்க வேண்டுமென்றால், உன்னுடைய அரசு ஒழுக்கச்சார்பு உடையதாக இருக்கவேண்டும். ஆதலினாலே,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்’

என்றார்.

முதலிலே குற்றங்கள் நிகழ்வதற்கு உரிய காரணமாக இருக்கிற, உன்னுடைய அரசின் குற்றத்தை நீக்கு! ஏழ்மையும், வறுமையும், பகையும், உட்பகையும் இருக்குமானால், மக்களும் குற்றம் செய்துகொண்டே இருப்பார்கள்.

அவர்களை மேய்ப்பதே அரசுக்கு ஒரு வேலையாக இருக்குமே தவிர, ஆட்சி வேலைகளைச் செய்ய முடியாது என்ற குறிப்பை மிகத் தெளிவாக நினைவுபடுத்துகிற காட்சியைப் பார்க்கிறோம்.

அடுத்து, தண்டனைக்கு வருவோம். முதலில் அரசுக்குச் சொன்னார். தண்டனை கொடுக்காமல் இருக்கலாமா?

தண்டனை கொடுப்பதை மேலை நாட்டு அறிஞர்கள் மிக வேடிக்கையாகச் சொல்கிறார்கள்.

‘கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல்’

கொலையினும் கொடியவனாக இருக்கிறவனை வேந்தன் ஒதுக்கத்தான் வேண்டும். அதை ஏன் என்று ரூஸோ தன் சமுதாய ஒப்பந்தத்தில் ஒரு அழகான உவமை சொல்லி விளக்குகிறான்.

ராமன் என்கிறவன் கோவிந்தனைக் கொன்று விட்டான். கோவிந்தன் இறந்துபோனான். ராமன் பேரிலே ‘கோவிந்தனைக் கொன்றுவிட்டானே’ என்று கோவிந்தனின் நண்பனுக்குக் கோபம் வரும். பிறகு அவன் என்ன செய்வான்? ராமனைக் கொல்ல வருவான். அப்போது, ராமன் இறந்துபட்டான் என்றால், ராமனுடைய நண்பன் அவனைக் கொல்ல வருவான். இது சங்கிலித் தொடர்