பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போலப் பெருகிக்கொண்டே இருக்கும். ஆதலினாலே, யார் ஏமாற்றப்பட்டானோ அவனுக்கு ஆறுதல் கொடுத்து, அவனுக்குரிய ஈட்டை அரசு கொடுத்துவிட்டால், சங்கிலித் தொடர் போலத் தீமைகள் தொடரா.

அந்தத் தண்டனை கொடுக்காது போனால், அவர்களுக்குள்ளே ஆத்திரம் மிகுந்து, தண்டனையை அவர்களே கொடுக்கின்ற நிலைமை ஏற்படும். நாட்டிலே கொலையே பெருகும்.

ஆகவே, தண்டனை கொடுப்பதுகூட மேலும் கொலை பெருகாமல் இருப்பதற்கு ஒரு தூக்குத் தண்டனையோடு முடித்துவிடுகிறார்கள். அப்படிக் கொடுக்காதுபோனால், மேலும் பல கொலைகள் பெருகும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

பெரும்பாலும் பார்க்கிறோம். ஒருவனை மற்றொருவன் வஞ்சித்து ஏமாற்றிவிட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அரசு தண்டனை கொடுத்துவிட்டது என்றால், அவனுக்கு ஒரு மன திருப்தி வந்துவிடுகிறது. அவன் திரும்பி வந்துவிட்டான், தண்டனை இல்லாமல் என்று சொன்னால், அவனுக்குத் திரும்பவும் ஏமாற்றம் ஏற்பட்டு, திட்டமிட்டு மற்றொருவனுக்குத் தண்டனையைத் தருகிறான். ஆக,

‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்’

550

என்று சொன்னார்.

நீ பயிரைச் சாகுபடி செய்யவேண்டும் என்று சொன்னால், களை பிடுங்க வேண்டியது அவசியம். ஆனால் நம்முடைய நாட்டிலே இப்போது களை எது, பயிர் எது என்று கண்டுபிடிப்பதே ஒரு பெரிய வேலையாகப் போய்விட்டது.