பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



199



இதைப் பார்த்தபொழுது இளங்கோவடிகளுக்கு நினைவு வருகிறது, கருணை மறவன் என்று. வீரத்தில் கருணை! மதம் பிடித்த யானை அருகில் செல்லும் செயல் வீரம்.

ஆனால், யானையையும் கொல்லாமல், பார்ப்பனரும் சாகாமல், தன்னையும் பலியிட்டுக்கொள்ளாமல், காப்பாற்றிய திறத்தைப் பார்க்கும்பொழுது, “கருணை மறவன்” என்று சொன்னார்.

ஆதலினாலே, “கடிதோச்சி மெல்ல எறிக,” என்றார் வள்ளுவர்.

கை மேலே ஓங்குகிறபோது, என்னவோ ஓங்குவது போல் தெரியவேண்டுமே தவிர, முதுகிலே விழுகிறபோது, அடி பலமாக விழுந்துவிடக் கூடாது. சில பேர் அடித்தால் எட்டு நாளைக்கு அந்த அடியின் வலி நிலைத்து நிற்கும். சில குழந்தைகள் கனவிலேகூட பயந்து அழுதுவிடும்.

இரவில் அவன் பெயரைச் சொன்னாலே பயப்படும். அவ்வளவு பயங்கரமாக அடித்து இருப்பான்.

“கடிதோச்சி மெல்ல எறிக”

இதை அப்பரடிகள் சிவபெருமானுடைய கருணையிலே வைத்துக் காஞ்சிபுரத் தேவாரத்திலே பேசுகிறார்.

இறைவன் புளியம் விளாரினாலே அடிக்கிறார். அடித்தவுடன், “வலிக்கிறதா மகனே? வாடா, தம்பி!’ என்று அணைத்துக்கொள்ளுகிறாராம். அணைத்து முத்தம் கொடுக்கிறாராம்.

‘புளியம் விளாரினால் மோதுவிப்பாய்
பின்னை உகப்பாய் கச்சிஏகம்பனே!’

விளாரினாலே அடிக்க ஓங்குகிறாராம். அடிபடு முன்னே கை முன்னாடி விழுந்துவிடுகிறதாம். பின் அணைத்து முத்தமிட்டு, ‘வலிக்கிறதா? நீ தவறு செய்யாமல்