பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்தக் காடுகளில் எல்லாம் புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் இருக்கும். ஏன் எனில், காடுகள் மனிதனுக்கு காற்றுக்கும், மழைக்கும் அவசியமானவை. இவன் பசியினால் எல்லாவற்றையும் வெட்டிச் சாப்பிட்டு விடுவான். ஆதலினாலே காட்டிற்குள்ளே புகுந்து, வெட்டாமல் இருக்க வேண்டும் என்று அச்சுறுத்துவதற்காக விலங்குகளை அங்கு வைத்தானாம். அவன் எண்ணியதைப் போலக் காட்டை வெட்டாமல் இரு என்று. இப்பொழுது விலங்கையும் வேட்டையாடி விட்டு, காட்டையும் வெட்டிவிடுகிறான். ஆதலினாலே,

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’

448

‘உனக்குப் பகை அரசன் வேண்டுமென்று அவசியமில்லை. உன் குற்றத்தை இடித்துச் சொல்லுகின்ற அறிஞனோ, கவிஞனோ, ஒரு குடிமகனோ இல்லாமையாலும் உன்னுடைய அரசு கெடும்’ என்று சொல்லுகிறார். ஆக,

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு’

389

என்பதன் மூலமும்,

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’

448

என்பதன் மூலமும், வள்ளுவருக்கு அரசியல் விமரிசனத்திலே எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்பதை அறியலாம்.

விமரிசனம் செய்து செய்து வளர வேண்டும் என்ற பெருவிருப்பம் இருந்தது.

இன்றைய மக்களாட்சித் தலைமுறையிலே, நாட்டினுடைய அமைப்பிலே பல்வேறு செய்தியினைப்