பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



205


பார்க்கிறோம். இப்பொழுது, நாம் நம்முடைய நாட்டு அரசை “க்ஷேமநல அரசு” என்று சொல்லுகிறோம்.

க்ஷேம நல அரசு (Welfare State) என்று சொன்னால், திருவள்ளுவர் அதற்கு ஓர் இலக்கணமே சொல்லுகிறார். என்ன மாதிரி அரசு? எல்லோருக்கும் எல்லா நலன்களும் நாடுகின்ற அரசு. “க்ஷேம நல அரசு” என்று பொருள்.

இந்திய அரசியல் நோக்கம், தமிழக அரசியல் நோக்கம் இது என்றுகூட, நாம் அடித்துக் கூறிவிடலாம் போலத் தெரிகிறது.

ஒரு நாடு என்றால், மக்களுக்குப் பிணி இருக்கக் கூடாது. கொடிய மனம் படைத்த சிலரை மருத்துவ மனையைச் சுற்றி அழைத்துச் சென்றால், அவர்கள் திருந்திவிடுவார்கள். அத்துணைக் கொடிய பிணிகள்.

பட்டினத்தார், தாயுமானவர் முதலியவர்களுடைய பாட்டுக்களையெல்லாம் சொல்லிக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, மருத்துவமனைக்குள்ளே ஒருவனை அழைத்துச் சென்று, ஆப்பரேஷன் செய்கின்ற இடத்தைக் காட்டினால், அவன் மனம் நொந்து, நல்லவனாக மாறினாலும் மாறுவான்.

எத்தனை எண்ணத் தொலையாத வியாதிகள்! மனிதன் துய்த்து, மகிழ்ந்து, அனுபவித்து, இறப்பதற்காக இங்கே வந்தான்.

பொங்கல் பானையிலே பால் பொங்குவது என்பது ஒரு சடங்கு. பால் எப்படிப் பொங்குகிறதோ அதைப் போல மனிதனுடைய மனத்திலே மகிழ்ச்சி பொங்க வேண்டும்.

மகிழ்ச்சி பொங்கி, உயிர் துய்த்து மகிழ்ந்து இன்ப ஊற்றிலே இருந்தால்தான் அது மேலும் உலகத்திற்கு மேலான கருத்துக்களை எண்ண முடியும். அது அல்லல் பட்டு அழுதால், அவர்களது வாழ்க்கை எந்த நோக்கத்தோடு இந்தப்