பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



213


இருப்பதால் உலகப் பொதுமறையாகவும் விளங்குகிறது. திருக்குறள் சமயச் சார்பற்ற நூல் என்று எல்லோராலும் வலியுறுத்தப்படுகிறது. அதிலே ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், சமயச் சார்பற்றது என்று சொன்னால், சமய நம்பிக்கை இல்லாத நூல் என்று பொருள் கொள்ளக் கூடாது. சார்பற்றது என்பதற்குப் பொருள் ஒன்றை வலிந்து வற்புறுத்தி, திணிக்காத நூல் என்றுதான் பொருள். கல்லாடர் என்ற ஆசிரியர், ‘சமயக் கணக்கர் மதிவழி செல்லாது’ என்று கூறுகிறார். இந்தச் சமயக் கணக்கர் யார் என்று சொன்னால், அவர்கள் கடவுளைக் கூட வழிபட மாட்டார்கள். தன் கடவுள்தான் உயர்ந்தது என்று சண்டை போடுவார்கள். மதத்தினுடைய கொள்கை கோட்பாடுகளை வாழ்க்கையில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால், தம்முடைய மதம் உயர்ந்தது என்று சண்டை போடுவார்கள். பலர், இந்த நாட்டில் மட்டுமல்ல, உலக சமுதாயத்திலேயே போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள்; பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மதத்தை அனுட்டித்து வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதை உலக வரலாறு, நமக்கு நினைவூட்டுகிறது. அதனால்தான் மதம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடத்தில் கூட சண்டைகள், கலவரங்கள் தோன்றுகின்றன. திருவள்ளுவர், உலகப் பொதுமறையாக ஆக்கித் தந்ததின் காரணமாக இவர் இன்னார் என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பொதுவாக மனித இயல்புக்குரிய அறங்களையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

ஓர் ஐந்தாறு குறள்களை இன்றைக்கு நாம் சிந்திக்கலாம். அடிப்படையிலிருந்து ஆதார சுருதியிலிருந்து என்னுடைய இந்தப் பேச்சு விலகிப் போகாது. அப்படி விலகிப் போனால் ஒன்றுக்கொன்று முரண்பாடு இருப்பது போலத் தெரியும். மாணிக்கவாசகர் என்ன வற்புறுத்தினாரோ, நாவுக்கரசர் என்ன வற்புறுத்தினாரோ, அதையே