பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குப்பைத் தொட்டி, அதை நம்முடைய பாரதி ஓரிடத்தில் நகைச்சுவையாகக் கிண்டல் - கேலியாகச் சொல்வார். யாழ்ப்பாணத்துச் சாமியார் என்று ஒருவரைச் சந்திக்கிறார் பாரதி. அந்த யாழ்ப்பாணத்துச் சாமியாரைத் தெருவிலே நடமாட விடுகிறார். அவர் ஒரு கிறுக்கர். பைத்தியம் மாதிரி தலையிலே கந்தைத் துணியெல்லாம் கட்டிக் கொண்டு போகிறார். சின்னப் பிள்ளைகளுக்குப் பொதுவாக சாமியாரைப் பார்த்தாலே, ஒரே மாதிரியாகப் பார்க்கின்ற பார்வை தோன்றும். அதிலும் ஒரு கந்தலையும் கிழிசலையும் தலையிலே கட்டிக் கொண்டு போனதால், ஏளனமாகப் பார்த்துப் பரிகாசம் செய்திருக்கிறார்கள். உடனே இந்த யாழ்ப்பாணத்துச் சாமியார் அவர்களை யெல்லாம் பார்த்து ‘கந்தலும், கிழிசலும் என் தலைமீது தான் இருக்கின்றன. நான் இப்படி ஆட்டினால் கீழே விழுந்துவிடும். ஆனால், நீ தூக்க முடியாத அழுக்கு மூட்டையை உள்ளத்தில் சுமந்து கொண்டிருக்கிறாயே’ என்று கேட்டார். தாங்க முடியாத அழுக்கு மூட்டையைச் சிலபேர் சுமந்து கொண்டிருப்பார்கள். இந்த அழுக்கு மூட்டைகளை யெல்லாம் நீக்குவது என்பது தான் செயலினுடைய நோக்கம். ஆக எதற்காகச் செய்கிறோம்? கோயில் கட்டியதனாலேயே கோயில் என்று வந்துவிடாது. ‘மனத்தது மாசாக மாண்டார் நீராடி’ அதாவது, 'மிகப் பெருமைக் குரியவர்களுடைய கோலத்தையும், மிகப் பெரியவர்களுக்குரிய தன்மையையும் தான் பெற்றிருப்பதாகக் காட்டி’ என்பர்.

மாணிக்கவாசகர் இதிலும் கேலி செய்வார்,

‘நாடகத்தால் உன்னடியார்
போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்’

என்பார்.