பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெற மாட்டோம். திடீரென இன்றைக்கு ஒரு துன்பமே வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் துன்பத்தையும் நாம் சிரித்த, மகிழ்ந்த, மலர்ந்த முகத்தோடு வரவேற்று அனுபவித்தால் தான் நமக்கு இவற்றினால் உள்ள துன்பம் நீங்கும். நமக்குத் துன்பம் என்றால் உடனே துவண்டு போகிற பழக்கங்கள், கசப்பான மருந்தாக இருந்தாலும் எப்படியாவது மூக்கைப் பிடித்துச் சாப்பிட்டுத்தான்னே ஆக வேண்டும். அந்த நோய்க்கு அது மருந்து என்று சொன்னால், மருந்து சாப்பிட முடியாவிட்டால், அப்புறம் நோய் எப்படிப் போகும்? அதே மாதிரி ஒரு நல்ல மருந்து மருந்துதான். அது இனிப்பாக இருக்கிறது. ஓர் அவுன்ஸ்தான் குடிக்கச் சொல்லுகிறார் மருத்துவர். யாராவது இரண்டு அவுன்ஸ் குடிப்பார்களா? மருந்து என்று சொல்லிவிட்டால், அது இனிப்பாக இருக்கிறது, சுவையாக இருக்கிறது என்று சொல்லி, கூடுதலாகக் கொஞ்சம் குடிப்பார்களா? மாட்டார்கள். அதேபோல, வாழ்க்கையில் இறைவனுடைய கருணையினாலேயோ, நம்முடைய முயற்சியினாலேயோ, நாம் அடைகின்ற இன்பமும் மருந்துதான்; துன்பமும் மருந்துதான். எது மிகினும் துன்பம்தான். நமக்கே தெரியும், இன்பம் மிகுந்தாலும், சுவையாக இருக்கிறது என்று மிகுத்து உண்டாலும் துன்பம்தான். கசப்பாக இருக்கிறது என்று சொல்லி, கசப்புப் பண்டங்களை, உவர்ப்புப் பண்டங்களை சேர்த்துக் கொள்ளாமல் போனாலும் துன்பம்தான். எனவே இந்த அடிப்படையில் இருள்சேர் இருவினையும் நம்மைப் பற்றாது இருக்க வேண்டும் என்று சொன்னால், திருவள்ளுவர் நமக்குச் சில வழிகள் சொல்லுகிறார். அன்றைக்கு நான் சிலவற்றைக் குறிப்பாகச் சொல்லி உணர்த்தியிருக்கிறேன். இன்றும் சிலவற்றைத் திருவள்ளுவரை மையமாக வைத்து உணர்த்துகிறேன்.

‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்’

6