பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



225


கேட்டார்கள். ‘ஆதிபகவன்’ என்ற சொல்லுக்குக் கூட அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஆக நாம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்கிறவர்கள். ‘ஐந்து அவித்தான்’ என்ற சொல்லுக்குப் பொருள், நான் அவற்றை மற்றவர்களுக்குக் கேடு செய்யாவண்ணம் பக்குவப்படுத்துதல் என்பதுதான். சிலபேர் சிலரைப் பார்க்கிறபொழுதே மனது சங்கடமாக இருக்கிறது. பயந்து ஓடி விடுவார்கள் போலத் தெரிகிறது. அப்படியெல்லாம் இல்லாமல் குளிர்ந்த கண், யார் சொல்வதையும் கேட்கிற பாங்கு, நல்ல இனிய வார்த்தைகளைச் சொல்லுதல் வேண்டும்.

அதனால்தான்

‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.’

100

என்று கூறினார். இனிய சொற்களை வழங்க வேண்டும் என்றார். ‘காய் கவர்ந்தற்று’ என்றார். இனிய உளவாக - அதுவும் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்றார். கணி இருப்ப என்று சொன்னால் இவன் கையில் ஏற்கனவே நல்ல பழம் இருக்கிறது. இதைத் தின்று சுவைத்து மகிழாமல் கீழே போட்டு விட்டு அடுத்த வீட்டுத் தோட்டத்திலே இருக்கிற காயைப் போய்த் திருடப் போகிறான்.

‘கனி இருப்பக் காய் கவர்ந்தற்று’

என்று சொன்னார். ‘கவர்ந்தற்று’ என்று சொன்னால் திருடுதல். அது தனக்கு உரிமை உடையது அல்ல. உரிமை உடையது அல்லாததை, இல்லாத ஒன்றை, இன்னொருவரிடத்தில் இருப்பதை, இன்னொருவருக்கு உரிமையானதைத் திருடப் போகிறான். ஆனால், அது பயனற்றது. இவனிடத்தில் கனி இருக்கிறது. இது ஒரு பைத்தியக்காரத் தனமான வாழ்க்கை. இப்படிச் சிலபேர் இருக்கிறார்கள்.

தி・IV・15