பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கும்பிட்டாலும் - சத்தியமாகச் சொல்லுகிறேன் - அந்தக் கடவுளுக்குப் போய்ச் சேரும். இந்த வேற்றுமை வந்ததற்குக் காரணம், யார் யார் எந்தெந்த வடிவத்தை நினைக்கிறார்களோ, அந்தந்த வடிவத்தோடு - ஏனென்றால் அவன் பயப்படக் கூடாதே என்று வருகிறான்.

மதுரையிலே பன்றிக்குட்டி ஒன்று பட்டினி கிடக்கிறது; காப்பாற்ற வேண்டும். காப்பாற்ற வேண்டு மென்றால், அந்தப் பன்றிக்குட்டிக்குப் பாலை நக்கிக் குடிக்கின்ற சக்தி இன்னும் வரவில்லை. ஆகப் பாலாடையினால் ஊட்டவும் முடியாது. தாய்ப் பன்றிதான் ஊட்ட வேண்டும். தாய்ப் பன்றி செத்துப் போய்விட்டது. என்ன செய்வது? சிவபெருமான் தாய்ப் பன்றியாகவே வடிவெடுத்து, அந்தப் பன்றிக் குட்டி, தன்னைக் கண்டு மிரளாதவாறு தன் மடியைப் பிடித்துத் தன்னை அணுகுகின்றவாறு தன்னை ஆக்கிக் கொண்டு, பாலை ஊட்டி வளர்த்த சமயம் நம்முடைய சமயம். ஆக, யார் என்ன வடிவம் என்பது பிரச்சனை யல்ல. யாருக்காக இரங்குவது, யாருக்கு அருள் செய்ய வேண்டும் என்பதுதான்.

நிரம்ப உயிர்ப்புள்ள உயிரோட்டமுள்ள ஒரு சமயமாக நமது சமயம் இருந்தது. காலப் போக்கில் நாம் அதைக் கொண்டுபோய்க் கடவுளை முன்னிட்டு வைத்தோம். கடவுளே தானாகப் பன்றியாக வருகிறார். பன்றிக்கு வந்து பாலூட்டிக் காப்பாற்ற வேண்டுமென்றால், அவன் தேவனாக இருந்தால் முடியுமா? திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும்போது அம்மையப்பராக வரலாம்; அது பிள்ளை. அதற்குப் புத்திசாலித்தனம் இருக்கிறது; தெரிகிறது; ‘தோடுடைய செவியன்’ என்று பாடுகிறது. பன்றிக்குட்டி என்ன செய்யும். இவர் மான், மழுவோடு இங்கு நின்றார் என்றால், அதற்குப் பயந்து உடனே மூச்சு நின்று போய் விடும். ஆதலால், என்ன செய்தார்? தாய்ப் பன்றியாகவே வடிவமெடுத்தார். ஆக, அவருக்குள்ள வடிவம், அவருடைய தென்பதல்ல. அவருக்கு அந்த வடிவம்தான்