பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆள் இருக்க மாட்டான். இவனுக்கு மதம் பிறந்த களம் நன்றிப் பெருக்கு, அன்புப் பெருக்கு; அன்பு வெள்ளம்! அவன் இந்த உலகத்தைப் பார்க்கிறான். இதில் ஏதோ வியத்தகு ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஓர் ஒருங்கிணைப்புகள் இருக்கின்றன; ஒழுகலாறுகள் இருக்கின்றன என்று சொல்லி அந்த அடிப்படையிலேதான் உண்ணாத கடவுளை உண்பிக்கிறான். அரசன் ஒருத்தன். ஒரே காலைத் தூக்கி, வலக் காலைத் தூக்கி இவர் ஆடிக் கொண்டிருக்கிறார். ‘வலிக்காதா? கொஞ்சம் கால் மாற்றி ஆடேன்' என்று கேட்டான். கால் மாற்றி ஆடினார் மதுரையில். கண்ணப்பர் கடவுளை எப்படிப் பார்த்தார். 'உனக்குப் பசிக்குமே! சாப்பிட முடியவில்லையே!’ என்று கேட்டார். 'கண்ணில் இரத்தம் வருகிறதே’ என்று கேட்டார். அவர்கள் கடவுளை அந்நியமாகப் பார்க்கவில்லை. ஊனாக உயிராக, உடைமையாக, உணர்வாக, தானும் அதுவும் அந்நியம் அல்லாததாகப் பார்க்கின்ற பார்வை இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

அதனால்தான், யார் எந்த வடிவத்தோடு நினைக்கிறார்களோ, அந்த வடிவத்தில் பார்க்கிறார்கள். தாய்மார்கள் பொங்கலன்று சாணத்தை எடுத்துப் பிள்ளையார் பிடிப்பார்கள். இந்த நாட்டில் இருக்கிறதோ, இல்லையோ தெரியவில்லை. மாட்டுச் சாணத்தை எடுத்துப் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை வைத்துப் பொட்டு இடுவார்கள், அந்தப் பிள்ளையார் பிடிப்பதற்காக, சின்னப்பாப்பா சாணம் கொண்டு வந்தது. ஒரு பிடியை எடுத்துப் பிள்ளையாராகப் பிடித்து வைத்தாகி விட்டது. மீதிச் சாணத்தைப் பக்கத்திலே போட்டது. தாய் சொல்கிறாள் தன் மகளிடம், ‘சீ! அந்தச் சாணத்தைத் தூக்கி வெளியே போடு’ என்று. அதைப் பிடித்து எடுத்துப் பிள்ளையாராக வைத்த பிறகு பிள்ளையார். பிள்ளையாராகப் பிடிக்காமல் வெளியே போட்டது சாணம் தான். ‘அதைத் தூக்கி வெளியில் போடு’ என்கிறார். ஆக