பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தூய்மையைப் பெற வேண்டுமென்றால், நாம் தீமை செய்யவே கூடாது; தவிர்த்துவிட வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். செய்கின்ற பொழுது; மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நமது இதயக் கமலத்திற்குள்ளாக, நெஞ்சத் தாமரைக் குள்ளாக, நாம் நினைக்கிற ஒரு மூர்த்தியை எழுந்தருளச் செய்து, குறித்த நேரத்தில் அதனுடன் பேசிப் பழகி, உறவெடுத்துக் கொண்டு, ஆசிரியனாக ஏற்றுக் கொண்டு அது உணர்த்துகிற முறையை வள்ளுவம் காட்டுகிறது; வள்ளுவம் தோன்றிய காலத்திலிருந்து இந்த மனித உலகத்தை வாழ்விப்பதற்காகவே தோன்றிய ஒரு மாமறை; பொது மறை; அந்தப் பொது மறை நம்முடைய வாழ்க்கையின் மறையாக விளங்கட்டும் என்று வாழ்த்துக் கூறி விடை பெறுகிறேன்.