பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
பொங்கல் பரிசு


பொருளியல் நூல்

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். ஒரு முழு அறநூல். தனி மனித வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் மிகவும் முற்போக்கான கருத்துக்களை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உணர்த்திய பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. திருக்குறள் எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை வலியுறுத்துகிறது. இன்றையச் சமுதாய அமைப்பில் நிறையப் பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கின்றன. இச் சிக்கல்கள் களையப்படுவதற்குச் சிலரின் தான தர்ம உணர்ச்சிகள் மட்டும் போதா; அல்லது தீவிர சட்டங்களும் ஆட்சி முறைகளுமே பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடவும் மாட்டா. அடிப்படையான சில உணர்வு மாற்றங்களும் தேவை. இத்தகைய கருத்துக்களைத் திருக்குறள் வாயிலாகக் காணலாம். பொருளாதார முன்னேற்றத்தை நாடும் ஒரு சமுதாயத்தில், பரம்பரைச் சொத்துரிமை ஒரு முட்டுக் கட்டையேயாகும். பரம்பரைச் சொத்துரிமையின் மூலம் மீண்டும் மீண்டும் முயற்சியால் பொருளீட்ட வேண்டுமென்ற