பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்கல் பரிசு



253



மேலும், அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஒன்று. அஃது நிலைபெற்ற தன்மையுடையதல்ல. இன்றைய அறிவு நேற்றைய அறிவைவிட வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இன்றைய அறிவைவிட நாளைய அறிவு வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இதுவே உலக நியதி. திருவள்ளுவரும்,

‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’

68

என்ற குறட்பாவின் மூலமும் இக்கருத்தை வலியுறுத்துகிறார். ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ என்ற சொற்றொடராலும் அறிவின் வளர்ச்சியைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளுகின்றார்.

1. மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் அறிவு இன்றியமையாதது;

2. அறிவு, உலகியலில் யதார்த்த நடப்புக்கு ஒத்திருக்க வேண்டும்;

3. அறிவு வளர்ச்சி அடையக்கூடியது,

என்னும் மூன்று கருத்துக்களும் சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள். இம்மூன்றையும் 19-ம் நூற்றாண்டின் மக்கள் மன்றத்தில் அறிமுகமான சோஷலிச சித்தாந்த இலக்கியப் படைப்புக்கள் விரிவாக ஆராய்ச்சி செய்கின்றன. அக்கருத்தினையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் குறட்பா வடிவில் எடுத்துக் காட்டியுள்ளதை எண்ணுகிற பொழுது பெருமித உணர்ச்சி மேலிடுகிறது. எனினும் பெருமித உணர்ச்சி தோன்றிய கவட்டையும்கூட கண்டு கொள்ள முடியாத வண்ணம் சிறுமை மூடிவிடுகிறது. திருவள்ளுவர் காட்டிய அறிவுப் பார்வை இன்றளவும் தமிழகத்தில் வளரவில்லை. மாறாகத் திரிந்த கருத்துக்கள் கால்கொண்டுள்ளன. இன்று