பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவு என்றால் புத்தக அறிவு-உலகம் என்றால் உயர்ந்தோர்-நிகழ்கால அறிவைவிடச் சென்றகால அறிவு சிறந்தது என்பன போன்ற கருத்துக்களே பரவி வருகின்றன. அதனாலேயே, தமிழ் இனம் வளர்ந்து வீழ்ந்து இருக்கிறது. இந்த அவல நிலைமைக்குப் பிறகாவது திருவள்ளுவர் இனங்காட்டி எடுத்துக் கொள்ளத் தூண்டிய அறிவை எடுத்துக் கொள்வோமாக!